ஊரடங்கு பயத்தில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்

ஊரடங்கு பயத்தில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்

2 mins read
97885664-51c5-4cf0-a872-012bbc721ce4
-

சென்னை: தமிழக அரசு இன்று முதல் இரவு நேர ஊரடங்கை அறி வித்துள்ளதை அடுத்து, இங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழி லாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காக நேற்று குழந்தைகளுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

கடந்த ஆண்டு ஊரடங்கின் போது பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படாததால் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் பல கி.மீ. தூரம் வரை நடந்தே சென்றனர். சிலர் மிதிவண்டிகளிலும் சென்றனர்.

அந்த மோசமான அனுபவத்தால் வடமாநிலத் தொழிலாளர்களில் சிலர் தற்போதே தங்களது சொந்த ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

இதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பீகார், லக்னோ, அகமதாபாத், ஹவுரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களில் கூட்டம் அதி கரித்து இருப்பதாக இந்து ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அதி காரிகள் கூறுகையில், ''தமிழகத் தில் கிருமி பாதிப்பு அதிகரித்து வருவதால், தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டுமானப் பணி களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் வந்துவிடுமோ என்ற அச்சம் வட மாநிலத் தொழிலாளர்களிடம் உள் ளது. இதனால் அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். ஆனாலும் பெரிய அளவில் செல்வதாகத் தெரியவில்லை,'' என்று கூறினர்.

திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பணி யாற்றி வரும் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று குவிந்த னர். இருப்பினும், ரயிலில் முன்பதிவு செய்யாதவர்கள், ரயில் நிலையங்க ளில் கூட்டம் கூட்டமாக காத்திருக் கும் அவலமும் தென்பட்டது.