சென்னை: தமிழகம் முழுவதும் கொவிட்-19 கிருமித்தொற்றின் இரண்டாவது அலை கட்டுக்கடங் காமல் பரவி வருவதை அடுத்து, இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் மாநிலத்தின் அனைத்து பகுதி களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் மாநில அரசு கூறியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள், மீன் சந்தைகள், காய்கறிக் கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், இதர கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இரவு நேர ஊரடங்கின்போது தனியார், பொதுப் பேருந்து போக்கு வரத்துக்கு அனுமதி கிடையாது.
ஆட்டோ, டாக்சி, தனியார் வாக னங்கள் உள்ளிட்டவையும் இயங்க அனுமதிக்கப்படாது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. அதேநேரம், இம்மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.
கடற்கரை உள்ளிட்ட அனைத்து வகை சுற்றுலாத் தலங்களுக்கும் பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உணவகங்களில் காலை, நண்பகல், மாலை நேரங்களில் 'பார்சல்' சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்தி ரிகை விநியோகம் மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், அவசர சிகிச்சை வாகனங்கள், அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்து வத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
ஊடகம், பத்திரிகை துறையினர் இரவிலும் செயல்படலாம்.
தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெட்ரோல், டீசல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளதாக நியூஸ் 18 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ேதநீர் கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வேகமாக பரவுவதால் இந்நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.
இதற்கிடையே, "தமிழக அரசிடம் இருந்து தெற்கு ரயில்வேக்கு ரயில் களை ரத்து செய்யும்படி கோரிக்கை கள் வரவில்லை. எனவே, தமிழ கத்தில் தற்போது இயங்கும் அனைத்து ரயில்களும் முழுமையாக இயங்கும். ஊரடங்கு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்படாது," என தெற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி கூறியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருமண நிகழ்ச்சிகளை மட்டுமே வாழ்வாதார மாகக் கொண்டு பல லட்சம் சமையல் தொழிலாளர்கள் இருந்து வருவதால்
மண்டபத்தில் 50% பேரை அனுமதிக்கக் கோரி சமையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். படம்: ஊடகம்