சென்னை: கொரோனா கிருமித் தொற்றின் இரண்டாவது அலையின் வேகம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம், நீா் மோர் வழங்கி தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட அதிமுக, திமுக ஆகிய கட்சி களுக்குத் தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசத்தை வழங்கிட வேண்டும் எனவும் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து திமுக, அதிமுக தொண்டர்கள் கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
"கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காக்க திமுக வேட்பாளர்களும் தொண்டர் களுடன் இணைந்து சேவை புரிய வேண்டும்," என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுகவின் செய்தித்தொடர் பாளா் பாபு முருகவேல் வெளியிட் டுள்ள தகவலில், "ஆண்டுதோறும் அதிமுக சாா்பில் தமிழகத்தில் நீா் மோா் பந்தல்கள் திறக்கப்படும். தற்போது தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் நீர் மோா், கபசுரக் குடிநீா், முகக்கவசம், கிருமி நாசினியை மக்களுக்கு வழங்கு வதற்குத் தோ்தல் ஆணையம் அதி முகவுக்கு அனுமதி அளித்துள்ளது," என்றார்.

