புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதி

புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதி

1 mins read
7b86e44e-1055-41d5-b66e-5c09b44e279c
-

சென்னை: மே மாதம் நடை­பெற உள்ள அண்ணா பல்­க­லைக்­கழக 'செமஸ்­டர்' பரு­வத் தேர்­வின்­போது, பொறி­யி­யல் மாண வர்­கள் புத்­த­கத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்­கலைக்­க­ழ­கம் அனு­மதி அளித்­துள்­ளது.

இத்­தேர்­வில், கேள்­வி­கள் நேர­டி­யாக கேட்­கப்­ப­டா­மல், சுற்றி வளைத்து கேட்­கப்­பட்­டி­ருக்­கும். மாண­வர்­கள் கேள்­வி­களை நன்கு புரிந்­து­கொண்டு விடை­யளிக்­கும் வகை­யில் வினாத்­தாள் தயா­ரிக்­கப்­பட உள்­ளது.

அதன்­படி விடை எழு­தும்­போது ஏதே­னும் சந்­தே­கம் ஏற்­பட்­டால், மாண­வர்­கள் புத்­த­கத்­தைப் பார்த்து புரிந்­து­கொண்டு விடை அளிக்­க­லாம்.

அதே­போன்று தேர்­வின்­போது இணை­யத்­த­ளத்­தைப் பயன்­படுத்­த­வும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக அண்ணா பல்­க­லைக்­க­ழ­கம் அறி­வித்­துள்­ளது.

கடந்த முறை பரு­வத் தேர்வு­களை இணை­யம் வழி நடத்­தி­வந்த அண்ணா பல்­க­லைக்­க­ழ­கம் இப்­போது அந்த முறையைக் கைவிட்­டுள்­ளது. இம்­முறை மாண­வர்­கள் புத்தகத்­தைப் பார்த்து தேர்வு எழுத அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

கிரு­மிப் பர­வல் தின­மும் அதி கரித்­து­வ­ரும் நிலையில், மாண வர்­க­ளின் நல­னைக் கருத்­தில் கொண்டு பல்­வேறு அறி­விப்­பு­கள் வெளி­யாகி வரு­கின்­றன.