முகக்கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு ரூ.500 அபராதம்

முகக்கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு ரூ.500 அபராதம்

1 mins read
98bebfa4-d55b-4ed5-9e2c-2a0470e7300d
சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலை யங்களிலும் ரயில்வே பாது காப்புப் படையினர் முகக்கவசம் அணியாதவர்கள் குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயில்களில் இருந்து இறங்கிய பயணிகளில் முகக்கவசம் அணியாத வர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். படம்: ஊடகம் -

சென்னை: சென்னை ரயில் நிலை­யங்­களில் முகக்­க­வ­சம் அணி­யா­மல் காணப்­படும் பய­ணி­க­ளி­டம் ரூ.500 அப­ரா­தம் விதித்து ரயில்வே பாது­காப்­புப் படை­யி­னர் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­ற­னர்.

தலை­ந­கர் சென்­னை­யில் முகக்­க­வ­சம் அணி­யா­த­வர்­க­ளுக்கு மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள், போக்கு வரத்து போலி­சார் உள்­ளிட்­டோர் ரூ.200 அப­ரா­தம் விதித்து வரு­கின்­ற­னர்.

இதைத்­தொ­டர்ந்து ரயில் நிலை­யங்­கள், ரயில்­களில் பய­ணி­கள் யாரே­னும் முகக்­க­வ­சம் அணி­யா­மல் இருந்­தால் ரூ.500 அபராதம் விதிக்­கப்­படும் என தெற்கு ரயில்வே சார்­பில் அறி­விக்­கப்பட்டு அபராதம் விதித்து வருகின்றனர்.

ஒரு­பு­றம் தொற்றுப் பர­வ­லைத் தடுக்க தடுப்­பூசி போடப்­பட்டு வரும் நிலை­யில், மறு­பு­றம், முகக்கவ­சம் அணி­தல், கைகளைக் கழு­வு­தல் உள்­ளிட்ட பாது­காப்பு வழி­மு­றை­களைப் பொது­மக்­கள் பின்­பற்றவும் அறி­வு­றுத்­தப்­பட்டு வரு­கிறது.