வீட்டில் பிரசவம்: தாய்-சேய் பலி

வீட்டில் பிரசவம்: தாய்-சேய் பலி

1 mins read
6bae1e7c-488c-4b18-b64c-59fd12276101
-

சென்னை: கர்ப்­பி­ணிப் பெண்ணை மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லா­மல் உற­வி­னர்­களே வீட்­டில் பிர­ச­வம் பார்த்­த­தால் தாயும் சேயும் பிர­ச­வத்­தின்­போது உயி­ரி­ழந்­த­னர். சோழ­வ­ரம் அடுத்த புதிய எருமை வெட்­டிப்­பா­ளை­யம் கிரா­மத்­தில் உள்ள தனி­யார் செங்­கல் சூளை­யில், பீகார் மாநி­லத்­தைச் சேர்ந்த 30 குடும்­பத்­தி­னர் அங்­கேயே தங்கி வேலை பார்த்து வரு­கின்­ற­னர். இதில், கோபு என்­ப­வ­ரின் மனைவி பூஜா, 20, பாடி­ய­நல்­லுார் ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் பிர­ச­வத்­திற்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தார். ஆனால், பயத்­தில் பூஜா, கடந்த 18ஆம் தேதி மருத்­து­வர்­க­ளி­டம் தெரி­விக்­கா­மல் அங்­கி­ருந்து வெளி­யேறி, செங்­கல் சூளைக்கு திரும்பி உள்­ளார். வீடு திரும்­பிய பூஜா­விற்கு பிர­சவ வலி ஏற்­பட்டு, மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லா­மல் உடன் இருந்­த­வர்­களே பிர­ச­வம் பார்த்­த­தில் தாயும் சேயும் உயி­ரி­ழந்­த­னர்.