கேட்காமலேயே ஆக்சிஜனை வெளியே அனுப்பிவிட்டது

கேட்காமலேயே ஆக்சிஜனை வெளியே அனுப்பிவிட்டது

3 mins read
e9d4884d-d018-479c-869c-614251ea9359
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர், தமிழ் நாட்டுக்கு செவ்வாய்க் கிழமை வந்த 600,000 குப்பி கொவிஷீல்டு மருந்தைப் பெற்றுக் கொண்டார். படம்: தினத்தந்தி -

ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்ததாக மத்திய அரசு மீது தமிழக அரசு புகார்

சென்னை: தமிழ்­நாட்­டில் ஸ்ரீபெ­ரும்­பு­தூ­ரில் செயல்­படும் 'ஐனாக்ஸ்' என்ற ஒரே ஓர் ஆலை மட்­டுமே ஆக்­சி­ஜனை சென்­னைக்­கும் தமி­ழ­கத்­தின் இதர பகு­தி­க­ளுக்­கும் விநி­யோ­கித்து வரு­கிறது.

இந்த நிலை­யில், அந்த ஆலை தயா­ரிக்­கும் ஆக்­சி­ஜ­னில் ஏறத்­தாழ 45 மெட்­ரிக் டன் திரவ ஆக்சிஜனை ஆந்­தி­ரா­வுக்­கும் தெலுங்­கா­னா­வுக்­கும் அனுப்­பும்­படி மத்­திய சுகா­தார அமைச்சு உத்­த­ர­விட்டு இருக்­கிறது.

"தமிழ்­நாட்­டில், குறிப்­பாக சென்னை­யில் கொவிட்-19 தொற்று குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு அதி­கரித்து வரும் நிலை­யில், இதைக் கருத்­தில் கொள்­ளா­மல் மத்­திய அர­சாங்­கம் அந்த உத்­த­ர­வைப் பிறப்­பித்து இருக்­கிறது.

"இந்த முடிவை தமிழ்­நாட்டுடன் கலந்து ஆலோ­சிக்­கா­மல் ஒரு­தலைப்பட்­ச­மாக மத்­திய அரசு எடுத்து இருக்­கிறது.

"தமிழ்­நாட்­டில் ஆக்­சி­ஜன் தங்கு ­த­டை­யின்றி கிடைக்க வேண்­டும் என்ற திட்­டத்­திற்கு அந்த முடி­வால் பாதிப்பு ஏற்­பட்டு இருக்­கிறது," என்று தமி­ழக சுகா­தார அமைச்­சர் சி. விஜ­ய­பாஸ்­கர் கூறி­ய­தாக டைம்ஸ் ஆஃப் இந்­தியா செய்­தித்­தாள் தெரி­வித்தது.

"பக்­கத்து மாநி­லங்­க­ளுக்கு உதவ தயா­ராக இருக்­கி­றோம். ஆனால் இப்­போது தமி­ழக நில­வரத்தைக் கருத்­தில்­கொண்டு மத்­திய அரசு செயல்­பட வேண்­டும். இப் பிரச்­சி­னையை கூடி­ய­வி­ரை­வில் மத்­திய சுகா­தார அமைச்­சி­டம் எழுப்­பு­வோம்," என்றார் அமைச்­சர்.

இத­னி­டையே, தூத்­து­க்கு­டி­யில் செயல்­படும் ஸ்டெர்லைட் ஆலை­யின் ஆக்­சி­ஜன் தயா­ரிப்­பு உலையை இயக்க அனு­ம­திக்­கும்­படி வேதாந்தா நிறு­வ­னம் தமி­ழக அர­சுக்கு கோரிக்கை விடுத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், செவ்­வாய்க்­கிழமை 600,000 குப்பி கொவி­ஷீல்டு மருந்து தமிழ்­நாட்­டுக்கு வந்­ததை அடுத்து கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசித் தட்­டுப்­பாடு மாநி­லத்­தில் இல்லை என்­றும் தடுப்­பூசிப் பணி இடை­யூறு இல்­லா­மல் தொடர்­வதா­க­வும் அரசு அறி­வித்­தது.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று புதி­தாக 10,986 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்­பட்­ட­தா­க­வும் 48 பேர் மர­ண­ம­டைந்­து­விட்­ட­தா­க­வும் நேற்று அதி­கா­ரி­கள் அறி­வித்­த­னர்.

அவர்­க­ளை­யும் சேர்த்து மொத்த மரண எண்­ணிக்கை 13,205 ஆகக் கூடி­யது. செவ்­வா­யன்று மொத்­தம் 6,250 பேர் குண­ம­டைந்­த­னர்.

சென்­னை­யில்­தான் அதிக பாதிப்பு இருக்­கிறது. சென்­னை­யில் செயல்­படும் முக்­கி­ய­மான அரசு மருத்­து­வ­ம­னை­களில் ஏப்­ரல் 20 நில­வ­ரப்­படி, கால்­வா­சிப் படுக்­கை­களே எஞ்சி இருக்­கின்­றன என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

கொவிட்-19 பர­வ­லைத் தடுக்க மாநி­லத்­தில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்­துள்­ளன.

ஏப்­ரல் 20 முதல் இரவு 10 மணி முதல் அதி­காலை 4 மணி வரை இரவு ஊர­டங்கு விதிக்­கப்­பட்டு இருக்­கிறது. ஞாயிறுகளில் முழு ஊரடங்கு நடப்பில் இருக்கும்.

இரவு நேரத்­தில் மாநி­லத்­தின் முக்­கிய சாலை­கள் வெறிச்­சோடி கிடப்பதோடு பக­லி­லும் பேருந்­து­களில் அவ்­வ­ள­வா­கக் கூட்­டம் இல்லை என்­பது தெரி­ய­வந்­தது.

இப்­போ­தைய இரண்­டா­வது அலை­யின் போது இளை­யர்­கள், சிறார்­கள் அதி­கம் பாதிக்­கப்­படும் வாய்ப்பு இருப்­ப­தாக மருத்­து­வ­மனை வட்­டா­ரங்­கள் மூலம் தெரி­கிறது.

ஏப்­ரல் மாதத்­தில் இது­நாள் வரை 12 வயது வரைப்­பட்ட 4,212 சிறார்­கள் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். ஏப்­ரல் மாதம் வரை இந்த வயதுப் பிரி­வைச் சேர்ந்த மொத்­தம் 32,523 பேர் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக புள்­ளி­வி­வரங்­கள் காட்­டு­கின்­றன.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வ­தால் சம­யத் தலை­வர்­க­ளின் ஒத்­து­ழைப்­பை­யும் உத­வி­யை­யும் தமி­ழக அரசு அதி­க­மாக நாடி வரு­கிறது என்றும் ஒத்துழைக்க அவர்கள் இசைந்து இருப்பதாகவும் தகவல்கள் கூறின.