காட்டிக்கொடுத்த பாட்டி: நரபலி முயற்சி புகார்; ஐந்து பேர் கைது

காட்டிக்கொடுத்த பாட்டி: நரபலி முயற்சி புகார்; ஐந்து பேர் கைது

2 mins read
67dcbd62-6c9c-4756-a2fe-b1452a9bd85c
-

ஈரோடு: தன் மரு­ம­க­னும் மகளும் சேர்ந்­து­கொண்டு தனது பேரப்­பிள்ளை­களை நர­பலி கொடுக்க முயன்­ற­தா­க­வும் அதை எதிர்த்து கேட்­ட­போது மரு­ம­க­னும் மகளும் தனக்குக் கொலை­ மி­ரட்­டல் விடுத்­த­தா­க­வும் பாக்­கி­யம் என்ற 60 வயது பாட்டி தன் கணவர், பேரப்பிள்ளைகளுடன் சென்று போலி­சில் புகார் தெரி­வித்­ததை அடுத்து ஐந்து பேர் கைது­செய்­யப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

திருமதி பாக்கியத்தின் மக­ளான ரஞ்­சிதா, 36, என்­ப­வர் ராம­லிங்­கம், 43, என்ற ஜவுளி வியா­பாரியை மணந்து­கொண்டு இருக்­கி­றார்.

இந்­தத் தம்­ப­திக்கு 15 வயது, 6 வயது மகன்­கள் இருக்­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில், ரஞ்சி­தா­வின் சம்­ம­தத்­து­டன் இந்­து­மதி, 32, என்ற மாதை ஆறு ஆண்­டு­களுக்கு முன் ராம­லிங்­கம் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார்.

ஈரோடு அருகே வசித்து வந்த ராம­லிங்­கம் குடும்பத்­தில் சசி என்ற மறுபெய­ருள்ள தன­லட்­சுமி, 39, என்ற மாதும் வாழ்ந்து வந்­தார்.

ராம­லிங்­கம், ரஞ்­சிதா, இந்­து­மதி, சசி நால்­வ­ரும் சேர்ந்து தனது இரண்டு பேரப்­பிள்­ளை­களை­யும் கொடு­மைப்­ப­டுத்தி வந்­த­தாக போலிஸ் புகா­ரில் திருமதி பாக்கியம் தெரி­வித்­தார்.

அதோடு மட்­டு­மின்றி, ராம­லிங்­கத்­தின் வீட்­டில் சசி சிவ­னா­க­வும் ரஞ்­சிதா சக்­தி­யா­க­வும் வேடம் போட்­டுக்கொண்டு பூஜை­கள் நடத்தி வந்­த­தா­க­வும் புகா­ரில் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த பிப்­ர­வரி 22ஆம் தேதி இரண்டு பேரன்­க­ளை­யும் பலி­கொடுத்­தால் சிவ­னு­டைய சக்தி நேர­டி­யா­கக் கிடைக்­கும் என்று ரஞ்­சி­தா­வி­டம் சசி கூறி­யதைக் காது கொடுத்து கேட்ட தன் பேரப்­பிள்­ளை­கள் பயந்து தன் வீட்டுக்கு ஓடி­வந்­து­விட்­ட­தா­க­வும் திருமதி பாக்கியம் புகாரில் தெரி­வித்தார்.

இதை நேர­டி­யாக கேட்டு விட வேண்­டும் என்ற முடி­வு­டன் ராம­லிங்­கம் வீட்­டிற்­குச் சென்­ற­போது ராம­லிங்­க­மும் ரஞ்­சி­தா­வும் தனக்கு கொலை மிரட்­டல் விடுத்­த­தா­க­வும் அந்த முதிய மாது போலிசில் தாக்கல் செய்த புகா­ரில் கூறினார்.

அந்தப் புகா­ரின் அடிப்­ப­டை­யில் ராம­லிங்­கம், ரஞ்­சிதா, இந்­து­மதி, சசி ஆகிய நால்­வ­ரு­டன் அவர் களுக்குப் புகலிடம் கொடுத்ததாகக் கூறி மாரி­யப்­பன், 42, என்ற ஆட­வரை­யும் போலி­சார் கைது­செய்து சிறை­யில் அடைத்துள்ளனர்.

இந்த விவ­ரங்­களைத் தெரி­வித்த தின­க­ரன் நாளி­தழ், போலிசார் எடுத்த நடவடிக்கைகளில் இரண்டு கார்­களும் சிவன் சிலை­யும் கைப்­பற்­றப்­பட்­ட­தா­க­வும் குறிப்­பிட்டு இருக்­கிறது.