மே 2 வாக்கு எண்ணிக்கை தாமதமடையலாம்

மே 2 வாக்கு எண்ணிக்கை தாமதமடையலாம்

2 mins read
55a6b347-215a-40b9-bced-81af1abb9adf
தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடுகளை அடுத்து கட்சி வேட்பாளர்களுடன் விருதுநகர் துணை தேர்தல் அதிகாரி கலந்து பேசினார். அதில் கருத்து இணக்கம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. படம்: தி இந்து -

சென்னை: தமிழ்­நாட்­டில் ஏப்­ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­தல் வாக்கு எண்­ணிக்கை அடுத்த மாதம் 2ஆம் தேதி நடக்­கிறது. மாநி­லத்­தில் கொவிட்-19 தொற்று அதி­க­மா­கி­விட்­ட­தால் கட்­டுப்­பா­டு­கள் நாளுக்கு நாள் கூடி வரு­கின்­றன.

இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யம் வாக்கு எண்­ணும் நடை­மு­றைக்கு புதிய கட்­டுப்­பா­டு­க­ளைப் பிறப்­பித்து இருக்­கிறது. ஆகை­யால் அனைத்து வாக்­கு­களை­யும் எண்ணி முடிக்க 24 மணி நேரம் போதா­த நிலை ஏற்படலாமென நம்பப்படுகிறது.

வாக்கு எண்­ணும் கூடம் குறைந்­த­பட்­சம் 2,000 சது­ர­அடி பரப்­ப­ள­வில் இருக்க வேண்­டும். ஒவ்­வொரு கூடத்­தி­லும் 14 மேசை­கள்­தான் போடப்­பட வேண்­டும்.

ஒரு மேசைக்கு 250 சது­ர­அடி இடம் இருக்க வேண்­டும் என்­றெல்­லாம் தேர்­தல் ஆணை­யம் கட்­டுப்­பா­டு­களை விதித்து இருக்­கிறது.

இத­னால் மாநி­லத்­தின் பல இடங்­க­ளி­லும் வாக்கு எண்­ணிக்கை தாம­த­ம­டை­யக் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. தேர்­தல் ஆணை­யத்­தின் புதிய உத்­த­ர­வு­களை அடுத்து பல்­வேறு அர­சி­யல் கட்சி பிர­மு­கர்­களை­யும் அழைத்து வாக்கு எண்­ணும் நடை­முறை பற்றி விருது­நகர் ஆட்­சி­யர் விவா­தித்­தார்.

விரு­து­ந­கர் மாவட்­டத்­தில் உள்ள ஏழு தொகு­தி­களில் ஒவ்­வொன்­றுக்­கும் கூடு­த­லாக வாக்கு எண்­ணிக்­கைக் கூடம் ஒன்றை அமைப்­பது பற்றி மாவட்­டத் தேர்­தல் அதி­காரிகள் பல கட்­சி­க­ளை­யும் அணுகி கருத்து கேட்­டனர். ஆனால் அதில் எந்த இணக்­க­மும் ஏற்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்நிலையில் வாக்கு இயந்­திரங்­கள் பாது­காப்­பாக வைக்­கப்­பட்டு உள்ள இடங்­களில் பாது­காப்பு குறை­பா­டு­கள் இருப்­பதாக அரசியல் கட்­சி­கள் பலதரப்பட்ட புகார்களை எழுப்பி வரு­கின்­றன.

தேர்தல் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் திமுக, மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் வலியுறுத்தின.

இவ்வேளையில், நாகை தெத்தி பகுதியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு உயரே புகைப்பட சாதனத்துடன்கூடிய வானூர்தியைப் பறக்கவிட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பேர் மீது வழக்குப் பதியப் பட்டு இருக்கிறது.