21 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய தலைமை ஆசிரியை

21 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய தலைமை ஆசிரியை

1 mins read
09724b7f-9b77-4cfc-96ab-d4d6d23b9b55
-

ராணிப்­பேட்டை: ராணிப்­பேட்டை மாவட்­டத்­தில் செயல்­படும் பஞ்­சா­யத்து யூனி­யன் தொடக்­கப்­பள்­ளி­ஒன்றில் தலைமை ஆசி­ரி­யை­யாக வேலை பார்க்­கும் சோபனா, 42, என்­ப­வர், 21 ஆண்­டு­க­ளுக்கு முன் தனது மதிப்­பெண்­க­ளைத் திருத்தி அதை வைத்து ஆசி­ரி­யர் வேலை­யில் சேர்ந்­தார் என்­பது தெரி­ய­வந்­துள்­ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்தது.

நாவல்­பூரைச் சேர்ந்த சோபனா­வுக்கு எதி­ராக ஜி. இந்­திரா என்ற கல்­வித் துறை அதி­காரி போலி­சில் புகார் செய்­தார். அதி­கா­ரி­கள் சோபனா மீது வழக்­குப் பதிந்­தனர்.

சோபனா தலை­ம­றை­வாகி­விட்­டார். தலைமை ஆசி­ரி­யர் பதவி­யில் இருந்து சோபனா இடை நீக்­கம் செய்­யப்­பட்­டார்.