திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் குப்பைகளைச் சேகரித்து அதை விற்று, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் மாரியம்மாள் என்ற இளம் பெண். இந்த ஏழ்மை நிலையிலும் அவர் தனது கையில் கிடைத்த ரூ.58,000 பணத்தையும் விலை உயர்ந்த கைபேசியையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அதை உரியவரிடம் கிடைக்கச் செய்துள்ளார். முக்கூடல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் காவுராஜன் மாரியம்மாள் நேர்மையைப் பாராட்டி, குத்துவிளக்கு ஒன்றைப் பரிசளித்தார்.
ரூ.58,000 பணம், கைபேசியை ஒப்படைத்த குப்பை சேகரிக்கும் பெண்
1 mins read
-

