கிராம மக்கள்: மணமகன்கள் தாடியுடன் இருந்தால் திருமணத்தில் பங்கேற்க மாட்டோம்

கிராம மக்கள்: மணமகன்கள் தாடியுடன் இருந்தால் திருமணத்தில் பங்கேற்க மாட்டோம்

1 mins read
294417e9-5664-4ba6-ad99-1e54f911820b
-

காரைக்­கால்: முடி­வெட்­டா­ம­லும் முகச்­ச­வ­ரம் செய்­யா­ம­ல் தாடி வைத்துக்கொண்டும் திருமணம் செய்துகொள்பவர்களின் திரு­ம­ணத்­தில் தாங்கள் கலந்­து­கொள்­ளப் போவ­தில்லை என்று காரைக்­கால் மேடு மீன­வக் கிரா­மப் பஞ்­சா­யத்து மக்கள் ஒரு வித்தியாச மான முடிவை அறிவித்துள்ளனர்.

இது மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

"திரு­ம­ணத்­தின்­போது மண­மகன் தாடி வைத்­தி­ருந்­தால் அந்­தத் திரு­மண விழா­வில் பங்­கேற்­க­மாட்­டோம்," என்று காரைக்­கால் மாவட்­டத்­தைச் சேர்ந்த காரைக்­கால் மேடு மீன­வக் கிரா­மப் பஞ்­சா­யத்­தார் ஒரு முடிவு எடுத்திருந்த னர். நேற்று முன்­தி­னம் இந்த பஞ்சாயத்து உறுப்­பி­னர்­கள் ஒரு சிறப்­புக் கூட்­டத்தை நடத்­தி­னர்.

கூட்­டத்­தின் முடி­வில் இவர்­கள் சில தீர்­மா­னத்தையும் அறி­வித்­திருந்தனர்.

"காரைக்­கா­லில் கடந்த சில ஆண்­டு­க­ளாக பெரும்­பா­லான திரு­மண விழாக்­களில் மண­ம­கன்­கள் முடி­வெட்­டா­ம­லும் முகச்­ச­வ­ரம் செய்­யா­ம­லும் திரு­ம­ணம் செய்து கொள்­கின்­ற­னர். இது நமது பாரம்­ப­ரிய பண்­பாடு இல்லை. இது­கு­றித்து பெண் வீட்­டாரோ, மாப்­பிள்ளை வீட்­டாரோ கவ­லை­கொண்­ட­தா­க­வும் தெரி­ய­வில்லை.

"நமது பாரம்­பரிய பண்­பாட்­டின்­படி திரு­ம­ணத்­தின்­போது தாடி வைத்திருப்­பது என்­பது ஏற்­பு­டை­யது அல்ல. எனவே, நமது பண்­பாட்டை நிலை­நி­றுத்­தும் வகை­யில் கிராம பஞ்­சா­யத்­தார் ஒன்று கூடிப் பேசி ஒரு முடி­வுக்கு வந்­துள்­ளோம்.

"அதன்­படி இனி வரும் காலங்­களில் மண­ம­கன் திரு­ம­ணத்­தின்­போது தாடி வைத்­தி­ருந்­தால், அந்­தத் திரு­மண விழா­வில் கிரா­மப் பஞ்­சா­யத்­தார் யாரும் கலந்­து­கொள்­வ­தில்லை என்று முடிவு செய்து இருக்­கி­றோம். இதைக் கிரா­மத்­தி­னர் அனை­வ­ருக்­கும் அறி­வித்­து­விட்­டோம்,'' என்று குறிப்­பிட்­டுள்­ள­னர்.