கேரளச் சிறுவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

கேரளச் சிறுவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

1 mins read
2a180618-8a71-42ce-aa9e-e0f4a7631d7e
நடிகர் ரஜினிகாந்தின் முகத்தை 300 'கியூப்'களைக் கொண்டு வடிவமைத்துள்ள கேரளாவைச் சேர்ந்த சிறுவன் அத்வைத்துக்கு 'சூப்பர்ப், தனிச்சிறந்த படைப்பு' என குரல் பதிவு மூலம் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். படம்: ஊடகம் -

சென்னை: கேரள மாநி­லம், கொச்சியைச் சேர்ந்த அத்­வைத் என்ற சிறு­வன் 300 வண்ண மய­மான 'க்யூப்'க­ளைப் பயன்­படுத்தி நடி­கர் ரஜி­னி­காந்­தின் உரு­வப்­படத்­தினை ஓவி­ய­மாக வடித்­துள்­ளார்.

இதை இணையத்­தில் பதி­வேற்றி உள்ள அத்வைத், "ரஜி­னி­காந்த் சார், 'ரூபிக் க்யூப்ஸ்' எனக்கு மிக­வும் பிடிக்­கும். 300 'க்யூப்'க­ளைக் கொண்டு உங்­கள் உரு­வப்­ப­டத்தை வடித்­துள்­ளேன். நீங்­கள் இதை விரும்­பு­வீர்­கள் என்று நம்­பு­கி­றேன்!'' என்று கூறி­இருந்தார்.

இந்­தக் காெணாளி இணை­யத்­தில் பர­வி­யதைத் தொடர்ந்து, கேர­ளச் சிறு­வனுக்கு ரஜி­னி­காந்த் "மிகவும் அருமை, தனித் திறமை மிக்க படைப்பு," என்று பாராட்டு தெரி­வித்­துள்­ளார்.

இதற்கு முன்பு சிறு­வன் அத்­வைத், பிர­த­மர் நரேந்­திர மோடி, கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன், நடி­கர்­கள் மம்­முட்டி, சுரேஷ்­கோபி, சல்­மான்­கான், பாடகி சித்ரா உள்­ளிட்ட பல­ரின் உரு­வப்­ ப­டங்­க­ளை­யும் இந்த 'க்யூப்'­களைப் பயன்­ப­டுத்தி வடித்துள்ளார். ­