ேகாயிலில் திருமணம்: 20 பேருக்கு மட்டுமே அனுமதி

ேகாயிலில் திருமணம்: 20 பேருக்கு மட்டுமே அனுமதி

1 mins read
2162da92-f7ce-4657-9d50-b5321d059f2a
-

சென்னை: மாநி­லத்­தில் ஞாயிறு தோறும் பொது ஊர­டங்கு அம­லில் இருக்­கும் என்­றா­லும், மக்­கள் தாங்­கள் முன்­கூட்­டியே திட்ட மிட்­ட­படி திரு­ம­ணத்தை ஆல­யங் களில் நடத்­த­லாம் என்று அற­நி­லை­யத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர்.

"திரு­ம­ணத் தேதியை வேறொரு தேதிக்கு ஒத்­திப்­போ­டு­வ­தற்­கான அவ­சி­யம் இல்லை. ஆனால் இந்த திரு­மண வைப­வத்­தில் 20 பேர் மட்­டுமே கலந்­து­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டு­வர்," என்று அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­தாக தினத்­தந்தி ஊட­கம் தக­வல் வெளி­யிட்டு உள்­ளது.

"வரும் 25ஆம் ேததி ஞாயி­றன்று சுப­மூ­கூர்த்த நாள் என்­ப­தால் திரு­ம­ணங்­கள் அதிக அள­வில் நடக்க உள்­ளன. கோவில்­களில் திரு­ம­ணம் நடத்த ஏற்­கெ­னவே முன்­ப­திவு செய்­துள்­ள­வர்­கள் திட்­ட­மிட்­ட­படி திரு­ம­ணத்தை நடத்­திக்­கொள்­ள­லாம். அதற்கு எந்தத் தடை­யும் இல்லை. ஆனால், திரு­ம­ணத்­தில் 20 பேர் மட்­டுமே பங்­கேற்­க­லாம். அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணிந்து வரு­வ­து­டன், சமூக இடை­வெ­ளி­யை­யும் கடைப்­பி­டிக்க வேண்­டும். திரு­ம­ணத்­துக்கு வரு­ப­வர்­கள் திரு­ம­ண அழைப்­பி­த­ழை­யும் கையில் கொண்டு வர­வேண்­டும்," என்று அற­நி­லை­யத்­துறை அதி்கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.