சென்னை: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
"வாக்குகளை எண்ணி முடிக் கும் பணி சற்று தாமதமாகலாம். ஆனால், நள்ளிரவு 12 மணிக்குள் ஒட்டுமொத்த வாக்குகளையும் எண்ணி முடித்து, இறுதி முடிவை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.
"கிருமிப் பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைப்பது குறித்து தற்போது வரை எந்த ஓர் ஆலோசனையையும் நடத்தவில்லை," என்றும் தேர்தல் அதிகாரி கூறியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத் தின் போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், "கொரோனா பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கும் முழு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஊரடங்குகளால் வாக்கு எண்ணிக்கையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. மே 2ஆம் தேதி காலை 8.30 மணிக்குத் தொடங் கும் வாக்கு எண்ணும் பணியை நள்ளிரவுக்குள் முடித்து அனைத்து முடிவுகளையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
"வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் முகவர்களுக்கும் கொரோனா பரிசோதனை, தடுப்பூசிகள் போடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
"ஒரு சில கட்டுப்பாடுகளும் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கும் அரசியல் கட்சி வேட்பாளர் களுக்கும் அறிவிக்கப்படும்.
"அவற்றை அனைவரும் கடைப்பிடித்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்," என்று சத்யபிரத சாகு வேண்டுகோள் விடுத்திருப்பதாக ெவப் துனியா ஊடகத் தகவல் குறிப்பிட் டுள்ளது.
அத்துடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடங்களில் ரகசியமாக கொள்கலன் உள்ளிட்ட வாக னங்களோ, சந்தேகப்படும்படியான ஆட்களோ யாரும் நுழையவில்லை என்றும் இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே வாக்கு எண்ணிக்கைக்குப் பயன்படுத்தும் மேசைகளைக் குறைக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பியுள்ளார்.

