சென்னை: மே 1ஆம் தேதிக்குப் பிறகு ஸ்புட்னிக் உள்ளிட்ட புதிய வகை தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக பிரித்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். எந்த தடுப்பூசி எந்த மருத்துவமனையில் போடப்படு கிறது என்ற விவரத்தையும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
"தமிழகத்தில் இனி தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது," என்றும் கூறிய அவர், அரசின் கட்டுப் பாடுகளைப் பின்பற்றாதவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

