சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இரண்டாவது முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால் உடனடியாகப் போட்டுக் கொள்ளுங்கள். வேறு ஏதேனும் உடல் பாதிப்புகளுடன் உள்ளவா்கள் எனில் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து விட்டு தடுப்பூசி போட்டுக் கொளுங்கள்," என்று அறிவுறுத்தி உள்ளார். அத்துடன், "தடுப்பூசி போட்டுக்கொண்டு நம்மையும் நாட்டு மக்களையும் பாதுகாப்போம்," என்றும் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
படம்: தமிழக ஊடகம்

