18 வயதுக்கு மேலான அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி

18 வயதுக்கு மேலான அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி

2 mins read
042925ff-5b48-43e5-9abc-90597623f5c1
ஒரு பெண் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார். மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலான அனைவருக்கும் இல­வச தடுப்­பூசி போடப்பட உள்ளது. படம்: ஊடகம் -

சென்னை: மாநி­லம் முழு­வ­தும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் இரண்­டா­வது அலை அசுர வேகத்­தில் பரவி வரு­கிறது. இந்த தரு­ணத்­தில், இளைய வய­தினரையும் பாது­காக்­கும் வகை­யில் 18 வய­திற்கு மேற்­பட்ட அனை­வ­ருக்­கும் கொரோனா தடுப்­பூசி இல­வ­ச­மாக போடப்­படும் என தமி­ழக அரசு அதி­ரடி அறி­விப்பை வெளியிட்­டுள்­ளது.

மே 1ஆம் தேதி முதல் இல­வச தடுப்­பூசி முகாம் நடத்­தப்­படும் என்­றும் மாநில அரசு கூறி­யுள்­ளதாக தினமணி ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

18 முதல் 45 வயது வரை­யுள்ள அனைத்து கட்­ட­டத் தொழி­லா­ளர்­கள், வெளி­மா­நிலத் தொழி­லா­ளர்­கள், அனைத்து சந்­தை­க­ளி­லும் பணி­யாற்­றும் தொழி­லா­ளர்­கள், சில்­லறை விற்­ப­னைக் கடை வியா­பா­ரி­கள், பள்ளி, கல்­லூரி ஆசி­ரி­யர்­கள், அரசு ஊழி­யர்­கள், ஆட்டோ, டாக்சி ஓட்­டு­நர்­கள் உள்ளிட்டோ ரும் மே 1ஆம் தேதி முதல் இல­வ­ச­மாக தடுப்­பூசி போட்டுக்கொள்ள முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்­றும் மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.

தமி­ழ­கத்­தில் தற்­போது 45 முதல் 59 வயது வரை உள்­ள­வர்­களுக்கு 13 விழுக்­கா­டும் 60 வய­துக்கு மேல் 18 விழுக்­கா­டும் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக அர­சின் செய்­திக்­கு­றிப்­பில் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

45 வய­துக்கு மேற்­பட்­ட­வர்களுக்­கான இல­வச தடுப்­பூசி முகாம் மேலும் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்­றும் அதில் கூறப்­பட்­டுள்­ளது.

18 முதல் 45 வயது வரை உள்ள வர்­க­ளுக்கு மே ஒன்­றாம் தேதி முதல் தடுப்­பூசி போட மத்­திய அரசு அனு­மதி அளித்­தி­ருப்­ப­தும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் அனை­வ­ருக்­கும் இல­வ­ச­மாக தடுப்­பூசி போடப்­படும் என்ற தமி­ழக அர­சின் அறி­விப்பை முன்­னாள் மத்­திய அமைச்­சர் ப.சிதம்­ப­ரம் வர­வேற்­றுள்­ளதாக தமிழ் சமயம் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்­ப­ரம் தனது டுவிட்­டர் பக்­கத்­தில், "தமிழ்­நாட்­டில் 18-44 வயது மக்­க­ளுக்கு மே 1ஆம் தேதி முதல் இல­வ­ச­மா­கத் தடுப்­பூசி போடப்­படும். இதற்­கான செல­வைத் தமிழ்­நாடு அரசு ஏற்­கும் என்ற அறி­விப்பை வர­வேற்­கி­றேன்.

"கொரோனா பாதிப்பு அதி­க­முள்ள மாவட்­டங்­களில் முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் தடுப்­பூசி முகாம்­கள் நடத்­தப்­படும் என்றும் அனை­வ­ரும் தவ­றா­மல் தடுப்­பூசி போட்டுக் கொள்ள வேண்­டும், இதற்­கான செலவை மாநில அரசே ஏற்­கும் என்­றும் தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

"இந்த நல்ல திட்­டத்­திற்­குத் தேவை­யான நிதி ஆதா­ரங்­களை எப்­ப­டிப் பெறு­வது என்று தமிழ்­நாடு அரசு அனைத்­துக் கட்­சி­க­ளை­யும் கலந்து ஆலோ­சிக்­க­வேண்­டும். தமிழ்­நாடு அர­சு­டன் ஒத்­து­ழைப்­ப­தற்கு காங்­கி­ரஸ் கட்சி முன் நிற்­கும்," என்று பதி­விட்­டுள்­ளார்.