14,000 பேரை நெருங்கும் கிருமி பாதிப்பு

14,000 பேரை நெருங்கும் கிருமி பாதிப்பு

1 mins read
034c119d-7f45-447b-886a-bff641d1aebb
-

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொற்றால் 13,776 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக நேற்று தெரிவிக்கப் பட்டது. இவர்களையும் சேர்த்து மாநிலம் முழுவதும் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1.5 மில்லியன் பேராக அதிகரித்துள்ளது.

கிருமித்தொற்றால் பாதிப்படைந்த 13,776 பேரில் 3,482 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். அத்துடன் இத்தொற்றினால் மாநிலத்தில் ஒரே நாளில் 78 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 13,395 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மேலும் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8,078 பேர் கிருமித்தொற்றில் இருந்து குணமாகினர். இதனையடுத்து தமிழகத்தில் 943,044 பேர் குணமடைந்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.