தமிழகத்தில் மே மாதம் 19,000 பேர் பாதிக்கப்படலாம் என கணிப்பு

தமிழகத்தில் மே மாதம் 19,000 பேர் பாதிக்கப்படலாம் என கணிப்பு

2 mins read
a7497fb4-06ef-47a2-8bae-62e940446c20
பிர­தீப் கவுர். படம்: ஊடகம் -

சென்னை: தமிழகத்தில் அடுத்த மே மாதத்­தில் கொவிட்-19 தொற் றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கக் கூடும் என்ற எச்­ச­ரிக்கை மணியை மருத்துவ நிபுணர்கள் முன்­கூட்டியே அடித்துள்ளனர்.

தமி­ழக அர­சின் மருத்­துவ நிபு­ணர் குழு­வின் உறுப்­பி­ன­ரும் ஐசி­எம்­ஆர் விஞ்­ஞா­னி­யு­மான பிர­தீப் கவுர் தனது டுவிட்­டர் பதிவில், "அடுத்த மே மாதம் மத்தியில் தமிழகத்தில் கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்ணிக்கை 19,000ஐ எட்­ட­க்கூடும் என கணிக்­கப்பட்­டுள்­ளது.

"கிருமித் தடுப்பு விதி­முறைகளை மக்­கள் பின்­பற்­றி­னால் மட்டுமே இதன் போக்கை மாற்றமுடியும்," என்று அவர் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, "கொரோனா தொற்­றுக்கு எதி­ரான அனைத்து நட­வடிக்­கை­களும் தோல்வி அடைந்து ­விட்­டன. முகக்­க­வ­சம் அணி­தல், தனி மனித இடைவெளியைப் பின்­பற்­று­தல், தடுப்­பூசி போடு­வது ஆகிய மூன்­றும்­தான் நம்­மைக் காக்கும் ஆயுதங்கள். அவற்றைப் பின்பற்றுங்கள்," என்று பிர­தீப் கவுர் அறி­வு­றுத்தி இருப்ப தாகவும் தமிழ் சம­யம் ஊட­கத் தக­வல் குறிப்­பிட்­டுள்­ளது.

இதேபோல், பொது சுகா­தா­ரத்­து­றை­யின் இயக்­கு­நர் டாக்­டர் டி.எஸ். செல்வவிநா­ய­கம் கூறு­கை­யில், "நோய்த்­தொற்றைக் குறைப்­பதற்குக் கண்­ட­றி­தல், பரி­சோ­தித்­தல், தனி­மைப்­ப­டுத்­து­தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள்­தான் சரி­யா­னவை. குறிப்­பாக, இத்­தொற்­றைக் கட்டுக்­குள் கொண்­டு­வர பரி­சோதனை க­ளின் எண்­ணிக்­கையை அதி­கப்­படுத்த வேண்­டும்," என்று வலி யுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே, சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் கோ.பிர­காஷ் செய்தியாளர்­களி­டம் கூறு­கை­யில், "தமிழ்­நாட்­டில் கிருமி பாதிப்பு நாள்­தோ­றும் புதிய உச்­சம் தொட்டு வரு­கிறது. மருத்­து­வ­மனை­களில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளி களின் எண்­ணிக்கையும் அதி­க­மாக உள்­ளது.

"சென்­னை­யில் நான்கு நாட்­கள் தொடர்ந்து மக்­கள் எல்­லா­ரும் முகக்கவசம் அணிந்­தாலே பாதிப்பு குறைந்துவிடும். அடுத்த ஒரு மாதத்­தில் தொற்று உயர்ந்து கொண்­டு­தான் செல்­லும். அதில் மாற்­றுக் கருத்து இல்லை.

"சென்­னை­யில் இறு­திச் சடங்கு, மதம் சார்ந்த கூட்­டங்­கள், திரு­மணங்­கள் ஆகி­ய­வற்­றில் பங்­கேற்­ப­தா­லேயே தொற்று அதி­க­மா­கப் பர­வு­கிறது. இது­ ஒரு இக்­கட்­டான கால­கட்­டம் என்பதால் இவற்றில் பங்­கேற்­பதை தவிர்க்கவேண்­டும். மக்கள் முகக்­க­வ­சம் அணியவேண்­டும்," என்று தெரி­வித்­துள்­ளார்.