16 ரயில்கள் ரத்து; மெட்ரோ ரயில் இயங்கும்; 250 இடங்களில் போலிசார் கண்காணிப்பு இன்று முழு ஊரடங்கு

16 ரயில்கள் ரத்து; மெட்ரோ ரயில் இயங்கும்; 250 இடங்களில் போலிசார் கண்காணிப்பு இன்று முழு ஊரடங்கு

2 mins read
5f87d13a-cff0-4992-80c1-fda9a7f00e2a
சென்னையில் தொண்டூழியர்கள் சிலர், கொவிட்-19 கிருமி பரவுவதைத் தடுக்க அறிவிப்பு பதாகையுடன் மிதிவண்டிகளில் சென்று மக்களுக்கு விழிப்புணர்வூட்டினர். மூக்குக்கு கீழே முகக் கவசத்தை அணிந்து கொள்ளாதீர்கள், கழுத்தில் முகக்கவசத்தை இறக்கி வைத்துக்கொள்ளா தீர்கள் என்று அவர்கள் அறிவுறுத்தினர். படம்: ஏஎஃப்பி -

சென்னை: கொவிட்-19 கிருமிப் பரவலின் இரண்டாவது அலை அசுர வேகத்­தில் பரவி வரு­வதை அடுத்து, தமிழகத்­தில் ஏழு மாதங்­களுக்­குப் பின்­னர் மீண்டும் முதல்­முறை­யாக இன்று தளர்­வற்ற முழு ஊர­டங்கு நடப்­புக்கு வந்­துள்­ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறு­வோர் மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­படும் என்றும் அவர்­கள் பயணம் மேற்கொண்ட வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­படும் என்றும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

வார இறுதி நாள்களில் மக்கள் அதிகம் ஒன்று கூடுவதைத் தடுத்தால்தான் கிருமிப்பரவலை ஒரு கட்டுக்குள் கொண்டு வரமுடி யும் என்பதைக் கருத்தில் கொண்டே அரசு இதுபோல் ஊரடங்கு உத்தரவு களைப் பிறப்பித்து வருகிறது.

கடந்த 20ஆம் தேதி கொவிட்-19 பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஞாயிறு தோறும் முழு ஊட­ரங்­கும் மற்ற நாள்­களில் இரவு 10 மணி முதல் அதி­காலை 4 மணி வரை இரவு நேர ஊர­டங்­கும் அம­லில் இருக்­கும் என்று மாநில அரசு அறி­விப்பு வெளி­யிட்­டி­ருந்­தது.

அதன்­படி, மாநி­லம் முழு­வ­தும் அத்­தி­யா­வ­சியத் தேவை­க­ளான மருந்து, பால், பத்­தி­ரிகை விநி­யோ­கம், மருத்­து­வ­ம­னை­கள், மருந்­தகங்­கள், அவ­சர சிகிச்சை வாக­னங்­கள், எரி­பொ­ருள் எடுத்­துச்­செல்­லும் வாக­னங்கள் இயங்குவதற்கு அனு­மதி வழங்­கப்பட்­டுள்­ளது.

ஆனால், வாரச் சந்­தை­கள், காய்­க­றிக் கடை­கள், மதுக்­க­டை­கள், திரை­ய­ரங்­கு­கள், உண­வ­கங்­கள், பேரங்­கா­டி­கள், வணிக வளா­கங்­கள் உள்­ளிட்ட அனைத்­தும் இன்று மூடப்­பட்­டி­ருக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த முழு ஊர­டங்கை மீறும் வகையில் பொறுப்பற்று நடந்து கொள்பவர்­கள் மீது சட்­டப்­படி நட­வடிக்கை எடுக்கவும் போலி­சா­ருக்கு அறி­வு­றுத்­தப்­பட்டுள்­ளது.

தமி­ழ­கம் முழு­வ­தும் அம­லில் இருக்­கும் இந்த ஊர­டங்கை கண்­கா­ணிப்­ப­தற்­காக 250க்கும் மேற்­பட்ட இடங்­களில் சோத­னைச் சாவடி­கள் அமைக்­கப்­பட்­டுள்ளதாக வும் மாலைமலர் ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்­கி­டையே, சென்­னை­யில் இன்று காலை 7 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயங்­கும் என்று மெட்ரோ ரயில் நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது. ஆனால், 16 சிறப்பு ரயில்­களை தெற்கு ரயில்வே ரத்து செய்­துள்­ளது.