சென்னை: 12 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு, திருவிக நகரைச் சேர்ந்தவர் ஜலாலுதீன், 29. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஜலாலுதீன் கைது செய்யப்பட்டார்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜலாலுதீன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.15,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
சிறுமியின் மறுவாழ்வுக்காக தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

