சிகிச்சையில் ஒரு லட்சம் பேர்

சிகிச்சையில் ஒரு லட்சம் பேர்

1 mins read
24d6e895-507f-4ff5-93b0-6d74432658a0
-

சென்னை: தமிழகத்தில் அன்றாடம் பதிவாகும் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தற்போது 100,668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 31,506 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே கொரோனா இரண்டாவது அலை பாதிப்பால் மேலும் 2 போலிசார் பலியாகி உள்ளனர். தற்போது சென்னையில் மட்டும் 3,609 போலிசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தினத்தந்தி நாளேட்டின் செய்தி தெரிவிக்கிறது.