புது கல்விக் கொள்கை: மொழிபெயர்ப்பில் தமிழுக்கு இடமில்லை

புது கல்விக் கொள்கை: மொழிபெயர்ப்பில் தமிழுக்கு இடமில்லை

2 mins read
afdb6e30-28d9-4beb-a493-4c58c7cfde1c
-

சென்னை: தேசி­யக் கல்­விக் கொள்கை பல்­வேறு மொழி­களில் மொழி­பெ­யர்க்­கப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலை­யில், தமிழ் மொழி புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தாக சர்ச்சை வெடித்­துள்­ளது.

இதற்கு திமுக தலை­வர் மு.க. ஸ்டா­லின், மதி­முக பொதுச்­செ­ய­லர் வைகோ உள்­ளிட்ட தலை­வர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

மத்­திய அரசு புதிய கல்­விக் கொள்­கையை அறி­வித்­துள்­ளது. நாடு முழு­வ­தும் அக்­கொள்கை அமல்­ப­டுத்­தப்­பட்டு வரும் நிலை­யில், அதன் அம்­சங்­கள் ஆங்­கி­லம், இந்தி மொழி­களில் வெளி­யி­டப்­பட்­டன.

இதை­ய­டுத்து பிற மாநில மொழி­க­ளி­லும் புதிய கல்­விக் கொள்­கையை மொழி­பெ­யர்த்து வெளி­யிட வேண்­டும் எனும் கோரிக்கை எழுந்­தது.

அதன்­படி அசாமி, பெங்­காலி, கன்­ன­டம், மலை­யா­ளம், தெலுங்கு, பஞ்­சாபி உள்­ளிட்ட 17 மொழி­களில் கல்­விக் கொள்­கை­யின் அனைத்து அம்­சங்­களும் மொழி­பெ­யர்க்­கப்­பட்டு வெளி­யா­கின.

ஆனால் தமி­ழில் மொழி­பெ­யர்க்­கப்­ப­ட­வில்லை. இதற்கு தலை­வர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

புதிய கல்­விக் கொள்­கை­யில் இடம்­பெற்­றுள்ள மும்­மொ­ழிக் கொள்கை உள்­ளிட்ட சில அம்­சங்­க­ளுக்குத் தமி­ழ­கத்­தில் ஒரு­த­ரப்­பி­னர் கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் அக்­கொள்கை அம்­சங்­கள் தமி­ழில் மொழி­பெ­யர்க்­கப்­ப­டா­தது சர்ச்­சையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்­நி­லை­யில், புதிய கல்­விக் கொள்­கை­யின் மொழி­பெ­யர்ப்பை வெளி­யி­டு­வ­தில் மொழி ஆதிக்­கத்­தை­யும் பாகு­பாட்­டை­யும் மத்­திய அரசு அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்தி உள்­ள­தாக திமுக தலை­வர் மு.க. ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழைப் புறக்­க­ணிக்­கும் பாஜ­க­ அ­ர­சின் மாற்­றாந்­தாய் மனப்­போக்­கைக் கண்­டிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், மாநில உரிமை, மொழி உணர்வு, மாண­வர் எதிர்­கா­லம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக உள்ள புதிய கல்­விக் கொள்­கையை எதிர்ப்­ப­தில் திமுக எப்போதும் உறுதி­யாக உள்­ளது எனக் கூறி­உள்­ளார்.