மு.க.ஸ்டாலின்: மக்களால் தாங்க முடியாது

மு.க.ஸ்டாலின்: மக்களால் தாங்க முடியாது

1 mins read
85a48851-7714-4224-8c47-69a093ee70c2
-

சென்னை: எதிர்வரும் மே 2ஆம் தேதிக்குப் பிறகு இன்னோர் ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி தொற்றுப்பாதிப்பு எண்ணிக்கை 5,989ஆக இருந்தது என்றும் அது மூன்று மடங்கைத் தொடும் அளவுக்கு அதிகரித்து வருகிறது என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

"வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமைய உள்ள நிலையில் அதிகாரிகளின் செயல்பாட்டிலும் தொற்று பாதிப்பைக் கட்டுப் படுத்துவதிலும் எவ்வித தொய் வும் ஏற்பட்டு விடக்கூடாது," என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.