தமிழருவி மணியன்: பல நாள்கள் போராடி கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ளேன்

தமிழருவி மணியன்: பல நாள்கள் போராடி கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ளேன்

1 mins read
d0f9321e-8b55-474c-adf9-784ea0645c91
-

சென்னை: சித்த மருத்­து­வம் மூலம் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்­பில் இருந்து தாம் மீண்­டுள்­ள­தாக தமி­ழ­ருவி மணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய, மாநில அர­சு­கள் சித்தா, ஆயுர்­வேத சிகிச்­சை­க­ளின் பக்­கம் முகம் திருப்ப வேண்­டும் என அவர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

அண்­மை­யில் இவ­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. இவ­ரது மனை­வி­யும் பின்­னர் பாதிக்­கப்­பட்­டார்.

"அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றும் தொற்று பாதிப்­பில் இருந்து மீள­வில்லை. இதை­ய­டுத்து சித்த மருத்­து­வத்தை நாடி­னேன். முன்­ன­தாக பரி­சோ­த­னை­யின்­போது எனது நுரை­யீ­ரல் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது தெரிய வந்­தது. மேலும் நிமோ­னியா காய்ச்­ச­லும் மர­ணத்­தின் விளிம்­பு­வரை கொண்டு சென்­றது.

"13 நாட்­கள் மர­ணத்­தோடு போரா­டி­னேன். இறு­தி­யில் சித்த மருத்­து­வத்­தின் உத­வி­யால் மீண்­டுள்­ளேன்.

"என்­னைக் காப்­பாற்­றிக் கரை சேர்த்­தது சித்த மருத்­து­வம்­தான். ஆனால் சித்த மருத்­து­வம், ஆயுர்­வே­தம், ஓமி­யோ­பதி ஆகி­ய­வற்­றிற்கு அர­சின் ஒத்­து­ழைப்பு இல்லை என்­ப­து­தான் அவ­லம்," என்று தமி­ழ­ருவி மணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

தனது அனு­ப­வம் மற்­ற­வர்­க­ளுக்­குப் பயன்­படும் என்­ப­தற்­கா­கவே அதைப் பகிர்ந்­து­கொள்­வ­தாக கூறி­யுள்­ளார்.