திருக்குறளை மொழிபெயர்த்த பிரான்சுவா குரோ மரணம்

திருக்­கு­றளை பிரெஞ்சு மொழி­யில் மொழி­பெ­யர்த்த தமி­ழ­றி­ஞர் பிரான்­சுவா குரோ (படம்) கால­மா­னார்.

பிரான்ஸ் நாட்­டைச் சேர்ந்த தமி­ழ­றி­ஞர் பிரான்­சுவா குரோ (Francois Gros). 1960களின் தொடக்­கத்­தி­லி­ருந்து தமி­ழில் ஆராய்ச்சி மேற்­கொண்டு வந்­தார்.

பாரிஸ் நக­ரில் (1933 - 2021) பாரிஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் Ecole Pratique Des Hautes Etudes என்ற உயர் ஆராய்ச்சி நிறுவனத்­தின் தென்­னிந்­திய வர­லாறு மற்­றும் மொழி­யி­ய­லுக்­கான (Philology) பேரா­சி­ரி­ய­ராக அவர் பணி­பு­ரிந்­தார்.

புதுச்­சேரி பிரெஞ்சு ஆய்வு நிறு­வ­னத்­தின் இந்­தி­ய­வி­யல் துறை­யில் தனது ஆராய்ச்­சிப் பணி­யைத் துவக்­கிய பிரான்­சுவா குரோ 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடு­க­ளுக்­கான பிரெஞ்சு ஆய்வு நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ரா­கப் பணி­பு­ரிந்­தார்.

சங்­கத் தமி­ழி­லி­ருந்து தற்­காலத் தமிழ் வரை நீளும் இவ­ரது ஈடு­பாடு பல்­வேறு தமிழ்ப் படைப்புகளைப் பிரெஞ்சு மொழிக்­குக் கொண்டு சென்­றுள்­ளது. பரி­பா­டல் (1968) திருக்­கு­றள் காமத்­துப்­பால் (1993) இரண்­டும் பிரெஞ்­சில் நூல் வடி­வம் பெற்­றுள்­ளன.

பிரான்சின் லியோன் நகரில் 17.12.1933இல் பிறந்த இவர், இலக்கியத்துறையில் பட்டம் பெற்றார். அதன் பின் கிரேக்கம், இலத்தீன் மொழிகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்.

இந்திய மொழிகள் பற்றி ஆய்வில் ஈடுபட்ட அவர், முதலில் சமஸ்கிருத இலக்கியங்களை கற்றுத் தேர்ந்த அவருக்குத் தமிழ் மொழி மீது பற்றுதல் ஏற்பட்டது. தமிழ் இலக்கியங்களும் இவருக்கு அறிமுகம் ஆயின. பாரிசில் உள்ள இனால்கோ நிறுவனத்தில் இணைந்து தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்.

பிரான்­சுவா குரோ­வின் மறைவு தமிழ் செவ்­வி­யல் இலக்­கி­யத்­திற்கு மட்­டு­மின்றி, நவீ­ன தமி­ழி­லக்­கி­யத்­திற்­கும் பேரி­ழப்­பா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!