உயர் நீதிமன்றம்: இரண்டாம் அலைக்கு தேர்தல் ஆணையம்தான் முக்கிய காரணம்

உயர் நீதிமன்றம்: இரண்டாம் அலைக்கு தேர்தல் ஆணையம்தான் முக்கிய காரணம்

2 mins read
c454c69a-e3f5-4717-aba0-2614d3951092
-

சென்னை: தமி­ழக சட்­ட­மன்ற தேர்­தல் பிர­சா­ரங்­க­ளின்­போது போது­மான கொரோனா பாது­காப்பு நெறி­மு­றை­க­ளைச் செயல்­ப­டுத்த தேர்­தல் ஆணை­யம் தவறி விட்­ட­தாக சென்னை உயர் நீதி­மன்­றம் கூறி­யுள்­ளது.

தேர்­தல் ஆணை­யம் மீது கொலைக் குற்­றம் சுமத்­தி­னால் கூட தவ­றில்லை என்­றும் நீதி­ப­தி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கரூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் 77 வேட்­ப­ளார்­கள் போட்­டி­யி­டு­வ­தால் இரண்டு இடங்­க­ளுக்­குப் பதி­லாக மூன்று இடங்­களில் வாக்கு எண்­ணிக்­கையை நடத்த வேண்­டும் என மாநில போக்­கு­வ­ரத்­துத்­துறை அமைச்­சர் எம்.ஆர். விஜ­ய­பாஸ்­கர் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு ஒன்­றைத் தொடர்ந்­தி­ருந்­தார்.

இந்த வழக்கை தலைமை நீதி­பதி தலை­மை­யி­லான அமர்வு நேற்று விசா­ரித்­தது.

இது தொடர்­பாக பிர­மாண பத்­தி­ரம் தாக்­கல் செய்த தேர்­தல் ஆணை­யம், பாது­காப்பு ஏற்­பா­டு­கள் முறை­யா­கச் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தது. ஆனால், இதனை ஏற்க நீதி­ப­தி­கள் மறுத்­த­னர்.

வாக்­குப் பதிவு தினத்­தன்று மட்டும்­தான் கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­கள் முறைப்­படி நடந்­த­தா­க­வும் பிர­சா­ரத்­தின்­போது எந்த தடுப்பு நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் கூறினர்.

இரண்­டா­வது அலை பர­வு­வ­தற்கு தேர்­தல் ஆணை­யம்­தான் முக்­கி­யக் கார­ணம் என நீதி­ப­தி­கள் கடு­மை­யா­கச் சாடி­னர்.

அர­சி­யல் கட்­சி­கள், தங்­க­ளின் பொறுப்­பு­களை உணர்ந்து கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­களை முறைப்­படி பின்­பற்­ற­வில்லை. தனி மனித இடை­வெளி கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. முகக் கவ­சத்தை யாரும் அணி­ய­வில்லை என்­றும் நீதி­ப­தி­கள் கூறி­னர்.

தேர்­தல் ஆணை­யம் மீது கொலைக்­குற்­றம் சுமத்­தி­னால் கூட தவ­றில்லை என்று கூறிய நீதி­மன்­றம், கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­களை முறை­யா­கப் பின்­பற்­றா­விட்­டால் வாக்கு எண்­ணிக்­கையை தள்­ளி­வைக்க உத்­த­ர­விட நேரி­டும் என்­றும் எச்­ச­ரித்­தது.

ஒரு தொகு­தி­யில் எத்­தனை வேட்­பா­ளர்­கள் போட்­டி­யிட்­டா­லும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கட்­சி­கள் தவிர, சுயேச்சை வேட்­பா­ளர்­க­ளின் சார்­பில் இரண்டு வேட்­பா­ளர்­க­ளின் பிர­தி­நி­தி­கள் மட்­டுமே வாக்கு எண்­ணும் பகு­தி­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்­றும் தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­தது.

இதை­ய­டுத்து, வாக்கு எண்­ணிக்­கைக்கு என்­னென்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கிறது என்­பதை விரி­வான அறிக்­கை­யில் தாக்­கல் செய்ய வேண்­டும் என கூறிய நீதி­மன்­றம் வழக்கை ஏப்­ரல் 30ஆம் தேதிக்கு ஒத்­தி­வைத்­தது.

இந்­தி­யா­வில் தமிழ்­நாடு, புதுச்­சேரி, கேரளா, மேற்கு வங்­கம், அசாம் ஆகிய நான்கு மாநி­லங்­கள், ஒரு யூனி­யன் பிர­தே­சத்­திற்­கான சட்­ட­சபை தேர்­தல் கடந்த மார்ச் மாதம் தொடங்­கி­யது.

தமிழ்­நாட்­டில் கடந்த ஏப்­ரல் 6ஆம் தேதி வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது. கேரளா மற்­றும் புதுச்­சே­ரி­யி­லும் ஒரே கட்ட தேர்­த­லாக ஏப்­ரல் 6ஆம் தேதி அன்று வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது.

அசாம் மாநி­லத்­தில் மூன்று கட்­டங்­க­ளாக தேர்­தல் நடை­பெற்­றது. மேற்கு வங்க மாநில தேர்­தல் எட்டு கட்­டங்­க­ளாக நடை­பெற்று வரு­கின்­றன.

இந்த வாக்­கு­கள் மே 2ஆம் தேதி எண்­ணப்­படும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.