'மற்ற மாநிலங்களுக்கு உயிர்வாயு தோம்புகளை அனுப்ப வேண்டாம்'
சென்னை: தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில் தயாரிக்கப்படும் உயிர்வாயு தோம்புகளை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். தமிழகத்திற்கு உயிர்வாயு தோம்புகளின் தேவை அதிகம் இருக்கிறது என்று கடிதத்தில் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
'திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியில்லை'
சென்னை: தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " பீகார் முதல் தென் தமிழகக் கடலோரப் பகுதி வரை நிலவும் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரையிலான வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: உயிர்வாயு உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக அனுமதி வழங்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் எந்தச்சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

