விவேக்கிற்கு மரியாதை: மத்திய அரசு திட்டம்

விவேக்கிற்கு மரியாதை: மத்திய அரசு திட்டம்

1 mins read
f6b9a922-c92d-4bc1-810b-5afcfe2d2710
-

சென்னை: காலஞ்­சென்ற நடி­கர் விவேக்­குக்கு (படம்) வித்­தி­யா­ச­மான முறை­யில் மரி­யாதை செலுத்த மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.

"விவேக் ஒரு நடி­க­ராக இருந்­தா­லும் சமூ­கம் மீது அக்­கறை உடை­ய­வர். இயற்­கை­யின் பாது­கா­வ­ல­ராக விளங்­கி­னார். எனவே, அவ­ருக்கு மரி­யாதை செய்ய வேண்­டும் என்று அமைச்­ச­ரும் பிர­த­ம­ரும் தீவி­ர­மாக யோசித்து வரு­கின்­ற­னர்.

"இது குறித்து விரை­வில் ஒரு திட்­டத்தை தயார் செய்­யுங்­கள்," என்று அமைச்­ச­ரி­டம் பிர­த­மர் கூறி­யுள்­ளார். இதை­ய­டுத்து மத்­திய அமைச்­சர் பிர­காஷ் ஜாவ­டே­கர் இரண்டு திட்­டங்­க­ளு­டன் தயா­ராக உள்­ளார். சென்­னை­யில் உள்ள 'ஆல் இந்­தியா ரேடியோ' கட்­ட­டத்­திற்கு விவேக் பெயரை வைக்­க­லாம் அல்­லது விவேக் படம் போட்ட தபால் அஞ்­சல் வெளி­யி­ட­லாம் என்று ஆலோ­சனை கூறி­யுள்­ளார்.

இந்த இரண்­டில் தபால் அஞ்­சல் திட்­டத்துக்கு ஒப்­பு­தல் கிடைத்து விரை­வில் இது குறித்து அறி­விப்பு வெளி­யா­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஆனால் இந்­தத் தக­வலை மத்­திய அரசு இன்­னும் அதி­கா­ர­பூர்­வ­மாக உறு­திப்­ப­டுத்­த­வில்லை.