செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
77a30754-62c0-460d-818a-c690b96cd056
-

55 வயதானோருக்கு 100 நாள் வேலை கிடையாது

சென்னை: கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இனி 100 நாள் வேலைகளில் 55 வயதிற்கும் மேற்பட்டோரை ஈடுபடுத்தவேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக வெப்துனியா ஊடகம் தெரிவித்தது.

இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சளி, இருமல், மூச்சு பிரச்னைகள், இதய சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களை நூறுநாள் வேலை திட்டத்தில் பணியமர்த்தக் கூடாது எனவும் பணியாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இஸ்ரோ மையத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் சென்னைக்கு வருகை

திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. நாளுக்கு நாள் தொற்று ஏற்படு வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே யுள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் தயாரிக்கும் ஆக்சிஜன் மருத்துவத் தேவைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 17,000 டன் எடை கொண்ட ஆக்சிஜன், சென்னையில் உள்ள மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்யும் நிறு வனத்திற்கு டேங்கர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தந்தி ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.

'மத்திய அரசே தடுப்பூசிகளை மாநில அரசுக்கு வாங்கித்தர வேண்டும்'

சென்னை: மாநிலங்களுக்கான தடுப்பூசிகளின் கொள்முதல் விலை அதிகமாக இருப்பதால் மத்திய அரசே தடுப்பூசி களை வாங்கி மாநிலங்களுக்கு வழங்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ள தாக நியூஸ் 18 ஊடகச் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தடுப்பூசிகளை மாநில அரசுகளே வாங்கலாம் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் அதிக விலையை நிர்ணயித்துள்ளதாக முதல்வர் குற்றம்சாட்டி உள்ளார். மாநில அரசுகள் நிதிச் சுமையில் இருக்கும்போது, தடுப்பூசிக்கு மாறுபட்ட விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது நியாயமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து வயதினருக்கும் தேவையான தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ள முதல்வர், தடையின்றி தடுப்பூசி போடுவதற்கு ஏதுவாக வெளிநாட்டு தடுப்பூசிகளையும் இறக்குமதி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.