தேர்தல் வெற்றியைக் கொண்டாட ஆணையம் தடை

தேர்தல் வெற்றியைக் கொண்டாட ஆணையம் தடை

1 mins read
3c99b93a-16a5-4c6e-a909-e8747fafd82f
-

சென்னை: தமி­ழக மாநி­லத்­தி­லும் யூனி­யன் பிர­தே­ச­மான புதுச்­சே­ரி­யி­லும் இம்­மா­தம் ஆறாம் தேதி ஒரே கட்­ட­மாக வாக்­குப்­ப­திவு நடந்­தது. இந்த வாக்­கு­கள் மே 2ஆம் தேதி எண்­ணப்­பட உள்­ளன.

ஒவ்ெவாரு தேர்­த­லி­லும் தேர்தல் வெற்றி ஒரு­பு­றம் இருந்­தா­லும் கட்­சித் தொண்­டர்­க­ளின் கொண்­டாட்­டம் ஒரு பெரிய விழா போல் இருக்­கும். பட்­டா­சு­கள் வெடிப்­ப­தும் இனிப்­புப் பதார்த்­தங்­களை பகிர்ந்து கொள்­வ­தும் ஆட்­டம் ஆடி கொண்­டா­டு­வ­தும் வியக்கவைக்­கும்.

இது­போன்ற கொண்­டாட்­டங்­கள் வரும் 2ஆம் தேதி­யன்று கூடாது என தேர்­தல் ஆணை­யம் தடை விதித்­துள்­ளதாக மாலை மலர் ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரோனா கிருமி பரவுவதற்கு தேர்­தல் ஆணை­யமே கார­ணம் என்று சென்னை உயர் நீதி­மன்­றம் நேர­டி­யாக குற்­றம்­ சாட்­டி­யி­ருந்த நிலை­யில், தேர்­தல் ஆணை­யம் நேற்று இந்த உத்­த­ர­வைப் பிறப்­பித்­துள்­ளது.

தமி­ழ­கம், புதுச்­சேரி, கேர­ளம், மேற்கு வங்­கம், அசாம் உள்­பட ஐந்து மாநி­லங்­க­ளி­லும் தேர்­தல் வெற்­றி­யைக் கொண்­டாட தடை விதித்­துள்ள தேர்­தல் ஆணை­யம், தடை உத்­த­ரவை மீறு­வோர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் எச்­ச­ரித்துள்­ளது.