சென்னை: இந்தியா முழுவதும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரு பவர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வந்தாலும், சில மாநிலங்களில் மட்டும் இந்த எண்ணிக்கை லட்சத்தைக் கடந்துள்ளதாக புதிய தலைமுறை ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3.5 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், எட்டு மாநிலங்களில் மட்டும் இத்தொற்றுக்கு லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர்.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் எட்டு மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதன்படி தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா (700,207), உத்தரப்பிரதேசம் (297,616), கர்நாடகா (262,181), கேரளா (219,221), ராஜஸ்தான் (136,702), சத்தீஸ்கர் (123,835), குஜராத் (115,006), தமிழ்நாடு (105,180) பேரும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

