சனியன்றும் மீன், இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

சனியன்றும் மீன், இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

1 mins read
a66e5910-5fde-434a-85d9-0b31253a40c4
-

சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறந்திருக்காது என்ப தால் கடந்த சனிக்கிழமை அன்று முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மீன், இறைச்சி, கோழிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதையடுத்து, கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஆங்காங்கே இயங்கும் மீன் சந்தை கள், மீன் கடைகள், இறைச்சி, கோழிக் கடைகளை வரும் மே 1ஆம் ேததி சனிக்கிழமை அன்று திறக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தந்தி தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.

இந்தக் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண் மைச் சட்டத்தின்கீழ், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

மாநிலத்தில் திங்கள்கிழமை ஒரேநாளில் 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன், இத் தொற்றினால் சிகிச்சை பலனின்றி மேலும் 92 போ் பலியாகினர்.