தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் செய்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கைது தினமும் 1,000 டன் ஆக்சிஜன் தயாரிக்க வேதாந்தா திட்டம் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன்: உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

"ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் அனைத்தையும் மத்திய அரசிடமே வழங்கவேண்டும். மத்திய அரசே மற்ற மாநிலங் களின் தேைவயைப் பொறுத்து அவர்களுக்குப் பிரித்து வழங்கும்," எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நியூஸ் 18 ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல், தமிழகத்திற்குத் தேவையான ஆக்சிஜனை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாட லாம் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க ஐவர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்கவும் இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெறுவார்கள் என்றும் இக்குழுவுடன் மேற்பார்வை குழு ஒன்றையும் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தூத்­துக்­கு­டி­யில் உள்ள ஸ்டெர்­லைட் ஆலை­யில் ஆக்­சி­ஜன் உற்­பத்தி செய்­வ­தற்கு தற்­கா­லிக மாக தமி­ழக அரசு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

இந்த அனு­ம­தி­யைத் தொடர்ந்து, இன்­னும் இரு வாரத்­துக்­குள் ஆக்­சி­ஜன் உற்­பத்­தி­யைத் தொடங்கு வதற்கு ஸ்டெர்­லைட் ஆலையை நிர்­வ­கித்து வரும் வேதாந்தா நிறு­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது.

அத்­து­டன், 1,000 டன் மருத்­துவ ஆக்­சி­ஜனை ஸ்டெர்­லைட் ஆலை யில் தின­மும் உற்­பத்தி செய்­ய­ப் போவதாகவும் அது கூறி­யுள்­ளது.

முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் தமி­ழ­கத்­தில் உள்ள நெருக்­க­டி­யான பகு­தி­க­ளுக்­கும் பின்­னர் நாட்­டின் பிற பகு­தி­க­ளுக்­கும் ஆக்­சி­ஜனை கொண்டு செல்ல அந்த நிறு­வ­னம் ஆேலாசித்து வரு­வ­தா­க­வும் புதிய தலை­முறை தொலைக்­காட்சி தகவல் தெரி­வித்­தது.

தமி­ழ­கத்­தில் கொரோனா இரண்­டா­வது அலை அசுர வேகத்­தில் பரவி வரு­வதால், ஏரா­ள­மான மக்­கள் ஆக்­சி­ஜன் உத­வி­யு­டன் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தினம் நடத்­தப்­பட்ட அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில், ஆக்­சி­ஜன் உற்­பத்­திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்­க­ளுக்கு தற்காலிகமாக திறக்க தமி­ழக அரசு அனுமதி வழங்கியது.

இத்­தொ­ழிற்­சா­லை­யில் எக்­கா­ர­ணத்தைக் கொண்­டும் தாமிர உற்­பத்தி உள்­பட வேறு எந்­த­வித உற்­பத்­தி­க்கும் அனு­ம­தி இல்லை என்றும் ­உற்­பத்தி செய்­யப்­படும் ஆக்­சி­ஜன் விநி­யோ­கத்­தில் தமி­ழ­கத்­துக்கே முன்­னு­ரிமை வழங்க வேண்­டும் என்­றும் குறிப்பிட்டிருந்தது.

மறி­யல் செய்தவர்கள் கைது

இதற்­கி­டையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சி­யர் செந்­தில்­ரா­ஜின் அலு­வ­ல­கம் முன்பு தூத்­துக்­குடி மாவட்ட மக்­கள் கூட்­ட­மைப்பி­னர் திடீர் மறி­யலில் ஈடுபட்டனர். எந்த கார­ணத்­துக்­கா­க­வும் ஆலையை மீண்­டும் திறக்­கக்கூடாது என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

இந்நிலையில், மறி­யலைக் கைவிட்டு கலைந்து செல்­லு­மாறு போலிசார் அவர்­க­ளி­டம் சமாதான மாகப் பேசி­னர். ஆனால், அவர்­கள் கலைந்து செல்­லா­மல் வாக்குவாதம் செய்ததால் மறி­ய­லில் ஈடு­பட்ட பத்துக்கும் மேற்­பட்­டோரை போலி­சார் கைது செய்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!