புதுடெல்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
"ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் அனைத்தையும் மத்திய அரசிடமே வழங்கவேண்டும். மத்திய அரசே மற்ற மாநிலங் களின் தேைவயைப் பொறுத்து அவர்களுக்குப் பிரித்து வழங்கும்," எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நியூஸ் 18 ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல், தமிழகத்திற்குத் தேவையான ஆக்சிஜனை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாட லாம் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க ஐவர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்கவும் இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெறுவார்கள் என்றும் இக்குழுவுடன் மேற்பார்வை குழு ஒன்றையும் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு தற்காலிக மாக தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அனுமதியைத் தொடர்ந்து, இன்னும் இரு வாரத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்கு வதற்கு ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகித்து வரும் வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அத்துடன், 1,000 டன் மருத்துவ ஆக்சிஜனை ஸ்டெர்லைட் ஆலை யில் தினமும் உற்பத்தி செய்யப் போவதாகவும் அது கூறியுள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் தமிழகத்தில் உள்ள நெருக்கடியான பகுதிகளுக்கும் பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்ல அந்த நிறுவனம் ஆேலாசித்து வருவதாகவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தகவல் தெரிவித்தது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அசுர வேகத்தில் பரவி வருவதால், ஏராளமான மக்கள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு தற்காலிகமாக திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இத்தொழிற்சாலையில் எக்காரணத்தைக் கொண்டும் தாமிர உற்பத்தி உள்பட வேறு எந்தவித உற்பத்திக்கும் அனுமதி இல்லை என்றும் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்துக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
மறியல் செய்தவர்கள் கைது
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜின் அலுவலகம் முன்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். எந்த காரணத்துக்காகவும் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
இந்நிலையில், மறியலைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலிசார் அவர்களிடம் சமாதான மாகப் பேசினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்லாமல் வாக்குவாதம் செய்ததால் மறியலில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்தனர்.

