கூவத்தூர்: சென்னையை அடுத்த கூவத்தூர் அருகே திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆம்னி பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்த னர். அப்போது, அவர்களது பேருந்து அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த அன்னபூரணி, அலமேலு, முனியம்மாள் ஆகிய மூன்று பெண்கள் உள்பட நால்வர் உயிரிழந்ததாக நியூஸ்டிஎம் ஊடகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் படுகாயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஐயப்பன், 40, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மேல்மருவத்தூரை அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக கல்பாக்கத்தில் உள்ள பெண் வீட்டிற்கு உறவினர்கள் ஆம்னி பேருந்தில் புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கூவத்தூர் அருகே சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, காத்தான்கடை என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதையடுத்து, ஆம்னி பேருந்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ் வுக்குச் சென்று ெகாண்டிருந்தவர்கள் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். சம்பவம் தொடர்பாக கல்பாக்கம் போலிசாரின் விசாரணை தொடர்கிறது.
ஆம்னி பேருந்து ஓட்டுநர் அதிவேகத்தில் வந்ததே விபத்திற்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

