ஸ்டாலின்: மக்களைக் காப்பாற்றுங்கள்

ஸ்டாலின்: மக்களைக் காப்பாற்றுங்கள்

2 mins read
a98c4495-10f4-494e-9be8-6589940db44e
-

சென்னை: திமுக தலை­வர் மு.க. ஸ்டா­லின் "மக்­க­ளைக் காப்­பாற்­றுங்­கள், மக்­க­ளைக் காப்­பாற்­றுங்­கள்," என நேற்று வெளி­யிட்ட காணொளி ஒன்­றில் வலி­யு­றுத்­திக் கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

'நம்­மை­யும் காப்­போம், நாட்­டை­யும் காப்­போம்' என்ற தலைப்­பில் வெளி­யி­டப்­பட்ட அந்த காணொ­ளி­யில், "ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­கள் உடல்­ந­ல­னைப் பாது­காத்து, நோய் வரா­மல் பாது­காக்க வேண்­டிய கால­கட்­டம் இது," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

"மத்­திய, மாநில அர­சு­கள் அறி­வித்­துள்ள கட்­டுப்­பா­டு­களை முழு­மை­யா­கப் பின்­பற்றி நடந்துகொள்­ளுங்­கள்.

"அவ­சி­யப் பணிகளுக்­காக மட்­டும், அதற்­கான இடங்­க­ளுக்கு மட்­டும் செல்­லுங்­கள். அவ­சி­ய­மற்ற பய­ணங்­க­ளைத் தவிர்த்­துக் கொள்­ளுங்­கள். வீட்­டில் இருங்­கள். வீட்­டில் இருந்து வேலை பாருங்­கள். வீட்­டுக்­குள்­ளும் போதிய தனி­ம­னித இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டி­யுங்­கள்.

தடுப்­பூ­சி­யைப் போட்­டுக் கொள்­ளுங்­கள். மிகத் தீவி­ர­மான உடல் ­ந­லக் கோளாறு உள்­ள­வர்­கள் தங்­க­ளது மருத்துவரைக் கலந்­தா­லோ­சனை செய்தபிறகு தடுப்­பூ­சி­யைப் பயன்படுத்­துங்­கள்," என்று அவர் கூறி­யுள்­ளார்.

"அர­சுத் தரப்­பில் அவ­ச­ர­மாக சில நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும். ஆக்­சி­ஜன், தடுப்­பூசி ஆகி­ய­வற்­றின் கையி­ருப்பை அதி­க­ரிக்க வேண்­டும்.

"அரசு மருத்­து­வ­ம­னை­களில் படுக்கை வச­தி­யைப் புதி­தாக உரு­வாக்க வேண்­டும். போதிய எண்­ணிக்கையில் வென்­டி­லேட்­டர்­ களைத் தயார் நிலை­யில் வைத்­தி­ருக்க வேண்­டும்.

"கொரோனா நோய்த் தொற்­றுத் தடுப்பு மற்­றும் சிகிச்­சைக்­குத் தேவை­யான மருந்­து­கள், புதிய படுக்கை வச­தி­கள் கொண்ட தற்­கா­லிக மருத்­து­வ­ம­னை­கள் அமைக்­கப்­பட வேண்­டும். மாநி­லத்தில் உள்ள ஆரம்ப சுகா­தார நிலையங்­களில் எல்­லாம் கொரோனா சிகிச்சை அளிப்­ப­தற்கு ஏற்­பாடு செய்ய வேண்­டும்.

"மக்­கள் பாது­காப்பை ஒரு இயக்­க­மாக மாற்ற வேண்­டும். முகக்­க­வ­சம் அணி­வதை ஒரு இயக்­க­மாக மாற்ற வேண்­டும். அனை­வ­ருக்­கும் பரி­சோ­தனை, அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி என்­பதை இயக்­க­மாக மாற்ற வேண்­டும்.

"தற்­போ­தைய காபந்து அரசு மக்­க­ளைக் காப்­ப­தற்­கான நடவடிக்­கை­களைத் தொய்­வில்­லா­மல் மேற்­கொள்ள வேண்­டும்.

"அதே நேரத்­தில், மக்­க­ளின் உயி­ரைப் பாது­காப்­ப­தில் அலட்­சி­யம் வேண்­டாம், அலட்­சி­யம் வேண்­டாம் என்று மத்­திய அர­சைக் கேட்­டுக் கொள்­கி­றேன்.

"மக்­க­ளைக் காப்­பாற்­றுங்­கள், மக்­க­ளைக் காப்­பாற்­றுங்­கள் என்று மீண்­டும் மீண்­டும் வலி­யு­றுத்­திக் கேட்­டுக்கொள்­கி­றேன். வர­லாற்­றின் பழிக்கு ஆளா­கா­தீர்­கள், ஆளா­கா­தீர்­கள் என்று எச்­ச­ரிக்­க­வும் கட­மைப்­பட்­டுள்­ளேன்.

"புதிய அரசு அமைந்­த­வு­டன் மக்­கள் நலன் காக்­கத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களும் துரி­த­மாக மேற்­கொள்­ளப்­படும்.

"எப்­போ­தும் மக்­கள் கவ­னத்­து­ட­னும் எச்­ச­ரிக்­கை­யு­ட­னும் இருந்து நம்­மை­யும் காப்­போம், நாட்­டை­யும் காப்­போம்," என்று காணொ­ளி­யில் ஸ்டா­லின் கூறி­யுள்­ள­தாக 'இந்து தமிழ் திசை' தெரி­வித்­தது.