'தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கொரோனா சிகிச்சை மையங்களைத் தொடங்கலாம்'

'தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கொரோனா சிகிச்சை மையங்களைத் தொடங்கலாம்'

1 mins read
5fd44618-bd5f-4d16-a29f-c13e05f79dec
-

சென்னை: தனி­யார் மருத்­து­வ­ மனை­கள், உண­வகங்­களும் கொரோனா சிகிச்சை மையங்­க­ளைத் தொடங்­க­லாம் என்று சென்னை மாந­க­ராட்சி தெரி­வித்­தது.

சென்­னை­யி­லும் தொற்று அதி­க­ரித்து வரு­வ­தால் தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள், உண­வ­கங்­கள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்­க­லாம் என்­றும் அதற்­காக மாந­க­ராட்­சி­யி­டம் அனு­மதி பெறத் தேவை­யில்லை என­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக தினத்­தந்தி வெளி­யிட்ட தக­வல் குறிப்­பிட்­டது.

தமி­ழ­கம் முழுக்க கொரோனா தொற்று அதி­க­ரித்து வரும் நிலை­யில் தலை­ந­க­ரான சென்­னை­யில் அதிக அள­வி­லான மக்­கள் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இத­னால் மருத்­து­வ­ம­னை­கள் தவிர்த்து ஏரா­ள­மான கல்வி நிலை­யங்­கள், சமு­தா­யக் கூடங்­கள் கொரோனா மைய­மாக மாற்­றப்­பட்டு வரு­கின்றன. இந்த நிலை­யில் சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் பிர­காஷ், சென்­னை­யில் தனி­யா­ரும் கொரோனா சிகிச்சை மையம் தொடங்­க­லாம். சென்­னை­யில் தனி­யார் ஹோட்­டல்­கள் மருத்­து­வ­ம­னை­கள் மாந­க­ராட்­சிக்கு தக­வல் தெரி­வித்­து­விட்டு கொரோனா மையம் தொடங்­க­லாம். கொரோனா சிகிச்சை மையம் தொடங்­கு­வது குறித்து மாந­க­ராட்சி அதி­கா­ரிக்கு மின்­அஞ்­சல் அனுப்­பி­னால் போது­மா­னது என்று கூறி­யுள்­ளார்.