சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்(படம்), கொரோனாவை எதிர்த்துப் போரா டும் வழிமுறைகளைத் தெரிவித்து உள்ளார்.
'நம்பிக்கையோடு போராடினால் நமக்கு நாமே தீர்வு' என்று கூறியுள்ள அவர், யோகா பயிற்சியில் ஈடுபட்டு தினம் ஒரு ரசம் வைத்து சாப்பிடுவது நல்லது என்று தெரி வித்துள்ளார்.
"நோயிடம் இருந்து தப்பித்து வாழ்வதற்கான வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
"நான் இரண்டு தவணையும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். எந்தப் பாதிப்பும் இல்லை. எந்த தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். முகக் கவசம் பயன்படுத்துங்கள்.
"நம் பாரம்பரிய முறைப்படி நீராவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, யோகா மேற்கொள்வது அவசியம். ஓர் எல்லைக்கு மேல் அரசால் நம்மை காக்க முடியாது.
"மருத்துவ கட்டமைப்புக்கு மேலும் சுமையைக் கூட்டக்கூடாது. நம்மை பாதுகாக்கும் பொறுப்பை நம்மிடமே வைத்துக் கொள்ள வேண்டும்," என்று கமல் கூறி உள்ளார்.

