மதுக்கடைகளை உடனே மூட
வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்து
விமானச் சேவைகள் ரத்து
சென்னை: சென்னையில் 42 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு விமானங்களில் வரும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக டெல்லி, மும்பை, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி, இந்துார், அந்தமான், புவனேஸ்வர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய, 42 விமான சேவைகள் போதிய பயணிகள் இல்லாததால் இரு வழிகளிலும் ரத்து செய்யப்பட்டன என்று தினமலர் நாளேடு கூறியது.
சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 79 விமான சேவைகள் இயக்கப்பட்டு 3,000 பேர் பயணித்தனர். பல்வேறு நகரங்களில் இருந்து 83 விமானங்கள் இயக்கப்பட்டு 4,000 பேர் சென்னை வந்தனர். சென்னையில் இருந்து சென்ற சில விமானங்களில் ஒற்றை இலக்கில் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

