செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b3d77a24-267d-404b-9085-921fdd129362
-

ஆலை கண்காணிப்புப் பணிக்கு

ஒன்பது பேருடன் குழு தயார்நிலை

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, ஆலையைக் கண்காணிக்கும் பணிக்கு ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள தாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளதாக சமயம் ஊடகத் தகவல் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது தலைமையிலான இந்தக் குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் சித் சிங், இரண்டு சுற்றுச்சூழல் வல்லுநர்கள், ஆலை எதிர்ப்பாளர்கள் இருவர், ஆக்சிஜன் தொழிற்சாலை குறித்து தொழில்நுட்ப அறிவு சார்ந்த அதிகாரி என மொத்தம் ஒன்பது பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலத்தைப் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்த மக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கொரோனாவால் மரணமடைந்த ஒரு பெண்ணின் சடலத்தைப் புதைக்க விடாமல் ஊர்மக்கள் சடலத்தோடு விரட்டியடித்த கொடுமை நடந்துள்ளது.

சென்னை, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கேந்த்ரபால், 60. இவரது மனைவி தமிழரசி, 53, கொரோனா பாதிப்பின் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவியின் சடலத்தை செங்கல்பட்டை அடுத்துள்ள பெத்தேல்நகர் சுடுகாட்டில் புதைப்பதற்காக அவசர சிகிச்சை வாகனம் மூலம் கொண்டு வந்துள்ளார். இந்த தகவல் அறிந்து திரண்ட அப்பகுதி மக்கள் சடலத்தைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக புதிய தலைமுறை செய்தி கூறியுள்ளது.

செங்கல்பட்டு தாலுகா காவல்துறை, வருவாய்த்துறை யினர் இருதரப்பினரிடமும் சமரசம் பேசியும் சடலத்தைப் புதைக்க ஊர்மக்கள் ஒத்துழைக்காமல் வாக்குவாதம் செய்த தால் சடலம் திருப்பி எடுத்துச்செல்லப்பட்டது. அதன்பிறகு சடலம் என்னவானது என்பது குறித்த தகவல் இல்லை.

அரசு சித்த மருத்துவமனை சார்பில் இரட்டை கஷாயம் விநியோகம்

கம்பம்: தேனி மாவட்டம், காமய கவுண்டன்பட்டி ஊராட்சியிலும் இதன் அருகிலுள்ள நாராயணத் தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்க முத்தன்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும் அரசு சித்த மருத்துவமனை சார்பில் கிருமித் தடுப்பு நடவடிக்கையாக இரட்டைக் கஷாயங்களான நிலவேம்பு கஷாயம், கபசுரக் கஷாயம் ஆகியன விநியோகம் செய்யப்பட்டன.

கிருமிப் பரவலைத் தடுக்க 150 மருத்துவர்கள், 150 தாதிகள் தேர்வு

சென்னை: சென்னையில் கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கவும் கண்காணிக்கவும் மாநகராட்சி சார்பில் 150 மருத்துவர்களையும் 150 தாதிகளையும் தேர்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. இவர்கள் ஓராண்டுகால ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். மருத்து வர்களுக்கு மாத ஊதியமாக 60,000 ரூபாயும் தாதியர்களுக்கு 15,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் இதற்கான நேர்காணல் நேற்றும் இன்றும் ரிப்பன் மாளிகை யில் நடப்பதாகவும் தினமணி தகவல் கூறியுள்ளது.