விதிமுறையை மீறிய திருமணம்: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

விதிமுறையை மீறிய திருமணம்: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

1 mins read
21ae288b-42b4-419f-9603-920f052dea22
-

சென்னை: மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுப்பதே மாநில அரசின் தலையாய கடமையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவாமல் அதை முறியடிக்கும் விதிமுறைகளை மீறி சென்னையில் ஒரு திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்துக்கு திடீரென வந்த அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதத் தொகையை வசூல் செய்த தாக நியூஸ் 18 செய்தி கூறியுள்ளது.

தம்பதிகள் வீட்டார் மொய்ப்பணம் பெறுவதற்கு பதில் அபராதம் கட்டியுள்ளனர்.

சென்னை புரசைவாக்கம் அருகில் உள்ள எம்எஸ்ஆர் திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று கூறி மாநகராட்சியில் அனுமதி வாங்கி திருமணத்தை நடத்தியுள்ளனர். ஆனால், அரசு உத்தரவை மீறி 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதால் திருமண மண்டபத்தின் உரிமையாள ருக்கு ரூ.90,000, திருமணத் தம்பதிகளுக்கு ரூ10,000 என மொத்தம் ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.