தேர்தல் கருத்துக்கணிப்பு: திமுகவுக்கே வெற்றி

தேர்தல் கருத்துக்கணிப்பு: திமுகவுக்கே வெற்றி

2 mins read
7a1e0cbe-c842-417a-9aa0-7f47fd775ef3
-

சென்னை: வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று முன்தினம் இரவு வெளி யானது. இதில், திமுக கூட்டணி குறைந்தபட்சம் 160 இடங்கள் முதல் அதிகபட்சம் 195 இடங்கள் வரை வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் ெதாலைக்காட்சி, சிஎன்எக்ஸ், இந்தியா டுடே, சாணக்யா உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்கள் தங்களின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

கடந்த காலங்களில் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கருணாநிதி, ஜெய லலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாக இது அமைந்துள்ளதால் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, 234 தொகுதி களில் 137ல் அதிமுகவே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டி லில் அமரும் என ஜெ.நியூஸ் கூறியுள்ளது.

திமுக 109 இடங்களிலும் அதிமுக 101 இடங்களில் வெல்லும் வாய்ப்புகள் உள்ளதாகவும் 24 தொகுதிகள் இழுபறியாக இருக்கும் என்றும் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தி வரும் சாணக்யா யூடியூப் சேனல் தெரிவித்துள்ளது.

டைம்ஸ் நவ்,

சி வோட்டர்

திமுக: 160-172

அதிமுக: 58-70

அமமுக: 0-4

மநீம:-

நாம் தமிழர்:-

ரிபப்ளிக் டிவி,

சிஎன்எக்ஸ்

திமுக: 160-170

அதிமுக: 58-68

அமமுக: 4-6

மநீம: 0-2

நாம் தமிழர்:-

இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா

திமுக: 175-195

அதிமுக: 38-54

அமமுக: 1-2

மநீம: 0-2

மற்றவை:-

இந்தியா ஹெட்

திமுக: 165-190

அதிமுக: 40-65

அமமுக: 1-3

மநீம: 1-3

மற்றவை:

ஏபிபி-சிவோட்டர்

திமுக: 160-172

அதிமுக: 58-70

அமமுக: 0-4

மநீம:-

மற்றவை:-

பி மார்க்

(P Marq)

திமுக: 165-190

அதிமுக: 40-65

தகவல்: தினமணி, ஒன் இந்தியா ஊடகம்