சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரேநாளில் கிருமிப் பரவலுக்கு சிகிச்சை பெற்றுவந்த 107 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை 13,933 பேர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், மேலும் 15,542 பேர் குணம்பெற்று வீடு திரும்பினர். தமிழகத்தில் தற்போது ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 556 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் அதிக பட்சமாக 5,445 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

