செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
36e34c43-7f81-4f99-9ed4-65946f60e6da
-

நீதிமன்றத்துக்கு இந்த மே மாதம் முழுவதும் விடுமுறை அறிவிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் இன்று முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதாக தினகரன் நாளேடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இந்த மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கு என்றே விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும். வாரந்தோறும் திங்கள், செவ்வாயன்று வழக்குகளுக்கான மனுத்தாக்கலும் புதன், வியாழனன்று விசாரணையும் நடைபெறும்," என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கிருமி பாதிப்புக்ேகற்ப ஆயிரக்கணக்கில் தெருக்கள் மூடல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் பாதிப்பு தலைநகர் சென்னையில் அதிகம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக, சென்னையில் கொரோனா கிருமித்ெதாற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆறு பேருக்கு மேல் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் உள்ள தெருக்களின் எண்ணிக்கை 993 ஆகவும் 10 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் உள்ள தெருக்களின் எண்ணிக்கை 375 ஆகவும் உயர்ந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

கோவையில் தங்கக் காசு தரும் ஏடிஎம் இயந்திரம் அறிமுகம்

கோவை: கோவையில் முதன்முறையாக தங்கக்காசை ஏடிஎம் இயந்திரம் மூலம் விற்பனை செய்யும் புதிய திட்டம் (படம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் மின்ட் ஊடகத் தகவல் கூறியுள்ளது. அத்துடன், இந்த ஏடிஎம் இயந்திரங்களை கோவை மாநகரில் மேலும் 10 இடங்களில் நிறுவவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தங்க நகை தயாரிப்பாளர்கள் சார்பாக கிராஸ்கட் ரோடு - சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள மென்ஸ் அவென்யூவில் இந்த ஏடிஎம் இயந்திரத்தை கோவையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நிறுவியுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த ஏடிஎம்மில் ரொக்கப்பணம், யுபிஐ, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பிஎஸ் 916 தரச் சான்றிதழுடன் தங்கக் காசுகளைப் பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.