தடுப்பூசி போட மனைவியை தூக்கிச்சென்ற 76 வயது முதியவர்

தடுப்பூசி போட மனைவியை தூக்கிச்சென்ற 76 வயது முதியவர்

2 mins read
10d12105-f635-4ca9-826d-f541edf27c5f
மனைவி கொரோனா பாதிப்பின்றி நீண்டகாலம் வாழவேண் டும் என்ற அக்கறை யுடன் தடுப்­பூசி போட தூக்­கிச் செல்லும்கணவர்.படம்: டுவிட்டர் -

கோவை: தமி­ழ­கத்­தில் ஒவ்வொரு நாளும் உச்சம் தொட்டு வரும் கொரோனா கிரு­மிப் பர­வ­லால் மக்­கள் அல்­லாடி வரு­கின்­ற­னர்.

இந்­தப் பாதிப்­பி­லி­ருந்து மீள அனை­வ­ரும் தடுப்­பூ­சி­ போட்டுக் கொள்­வது அவ­சி­யம் என்ற விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது.

ஆனால், அதே­நே­ரத்­தில் ஒரு சில இடங்­களில் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தற்கு உகந்த வசதிகள் செய்­து தரப்படவில்லை என்ற புகா­ரை­யும் சமூக ஆர்­வ­லர்­கள் கூறி­யுள்­ள­னர்.

குறிப்­பாக, கோவையைச் ேசர்ந்த 76 வயது முதி­ய­வர் ஒரு­வர் தனது 69 வயது மனை­விக்கு கொரோனா தடுப்­பூசி போடுவதற்காக துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.

தனது மனை­வி­யால் நடக்­க­முடி­யாத நிலையில், மருத்துவமனையில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால், இந்த தள்­ளாத வய­தி­லும் தன் கைக­ளா­லேயே மருத்­துவம­னைக்­குள் மனைவியைத் தூக்கிக்கொண்டு சென்­றது காண்­போரை நெகி­ழ வைத்ததாக வெப்­து­னியா தக­வல் கூறியுள்­ளது.

இது­போன்ற வய­தா­ன­வர்­கள் தடுப்­பூசி போட வரும்­போது சக்­கர நாற்­காலி வச­தியைச் செய்து­கொ­டுக்க வேண்­டும் என்­பது ஒவ்வொரு மருத்­து­வ­ம­னை­யின் அடிப்­படை கட­மை­யா­கும் என்று வலைத்தளவாசிகள் கரு­த்து­ பதி­விட்­டுள்­ள­னர்.

மருத்­து­வ­மனை வாச­லில் இருந்து மருத்­து­வ­ம­னைக்­குள் கொண்டுசெல்ல ஒரு சக்­கர நாற்­காலி கூட இல்­லையா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேர்­தல் நேரத்­தில் வய­தா­ன­வர்­கள் வாக்­க­ளிக்க காட்டும் அக்கறையை இந்தக் கொரோனா காலகட்டத்திலும் காட்டவேண்டும் என்றும் இனி­மே­லா­வது வய­தா­ன­வர்­களை மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்ல சக்கர நாற்காலி வசதியைச் செய்துகொடுக்க அனைத்து மருத்­து­வ­மனை நிர்­வா­க­மும் முன்வரவேண்­டும் என்றும் அவர்கள் கோரிக்­கைகளை முன் வைத்துள்ளனர்.