விசிக எம்எல்ஏவுக்குக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி

விசிக எம்எல்ஏவுக்குக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி

1 mins read
dfce802a-c994-4382-b50c-a4c3dd5f366d
-

நாகப்­பட்­டி­னம்: விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் துணைப் பொதுச் செய­லா­ள­ரும் நாகை தெற்கு தொகு­தி­ எம்­எல்­ஏ­வுமான ஆளூர் ஷாந­வா­சுக்­குக் கொலை மிரட்­டல் விடுத்த பாஜக நிர்­வாகி கைது செய்­யப்­பட்­டார்.

திமு­க­வு­டன் கூட்­டணி அமைத்து தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லில் ஆறு தொகு­தி­களில் போட்­டி­யிட்ட விடு­தலைச் சிறுத்­தை­கள் கட்சி, நான்கு தொகு­தி­களில் வெற்­றி­பெற்­றது.

இந்­நி­லை­யில், "தமிழகத்தில் தாமரை மலர பணி­யாற்­றிய அத்­தனை நல்­லுள்­ளங்­களுக்­­கும் கட்­சி­யின் உண்மை தொண்­டர்­க­ளுக்­கும் கூட்­டணி நிர்­வா­கி­களுக்­கும் வெற்றிப் பரி­சாக ஆளூர் ஷாந­வாஸ் மர­ணச் செய்தி விரை­வில் வரும் என நினைக்­கிறேன்," என பாஜக இளை­ஞ­ரணி தஞ்சை தெற்கு என்ற பெய­ரில் ஃபேஸ்புக்­கில் ஒரு பதிவு வெளி­யாகி இருந்­தது. இதைத் தொடர்ந்து அளிக்­கப்­பட்ட புகாரை அடுத்து, அப்­ப­திவை வெளி­யிட்ட அன்­ப­ர­சன் என்­ப­வரை போலிஸ் கைது செய்­து, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்தது.