43 மருத்துவர்கள் பலி: ரூ.25 லட்சம் இழப்பீடு

43 மருத்துவர்கள் பலி: ரூ.25 லட்சம் இழப்பீடு

1 mins read
9c3738b4-a683-4b71-b032-1a9c5d729efb
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா சிகிச்­சைப் பணி­யில் ஈடு­பட்­டுள்ள மருத்­து­வர்­க­ளுக்கு 30 ஆயி­ரம் ரூபாய் ஊக்­கத்­தொகை வழங்­கப்­படும் என முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார். இதே­போல் தாதியர்களும் 20 ஆயி­ரம் ரூபாய் வழங்­கப்­ப­டு­கிறது.

கொரோனா நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கும்­போது மருத்து­வர்­கள், செவி­லி­யர்களுக்கும் தொற்று ஏற்­ப­டு­கிறது. மேலும், பணி­யின்­போது தமி­ழ­கத்­தில் மட்­டும் இது­வரை 43 மருத்­து­வர்­கள் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் உயி­ரி­ழந்த மருத்­து­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு தலா 25 லட்­சம் ரூபாய் இழப்­பீடு வழங்­கப்­படும் என தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

"கடந்த ஓராண்­டாக கொரோனா நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளித்து காப்­பாற்­றும் அரும் பணி­யில் மருத்­து­வர்­களும் செவி­லி­யர்­களும் இதர பணி­யா­ளர்­களும் ஈடுட்­டுள்­ள­னர். தமது உயி­ரைத் துச்­சம் என மதித்து களப்­பணியாற்­றிய சில மருத்­து­வர்­கள் தங்­கள் இன்­னு­யி­ரை­யும் தியா­கம் செய்­துள்­ள­னர்.

"இது ஈடுசெய்ய முடி­யாத பெரும்­ தி­யா­கம் என்­பதை உணர்ந்து அம்­ம­ருத்­து­வ­ரின் குடும்­பத்­தா­ருக்கு 25 லட்­சம் ரூபாய் வழங்க அரசு முடிவு செய்­துள்­ளது," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

கொரோனா சிகிச்சை, அது சார்ந்த பணி­களில் மேலும் பலர் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பட்ட அவர், அவர்­க­ளுக்­கும் ஊக்­கத்­தொகை வழங்­கப்­படும் என்­றார்.

கடந்த ஏப்­ரல் மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு மருத்­து­வர்­கள் ரூ.30 ஆயி­ரம், தாதியர் 20 ஆயி­ரம் ரூபா­யும் இதர பணி­யா­ளர்­கள் 15 ஆயி­ரம் ரூபா­யும் பயிற்சி மருத்து­வர்­கள் 20 ஆயி­ரம் ரூபா­யும் ஊக்­கத்­தொ­கை­யாக பெறுவர்.