ரகுபதி: 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நிச்சயம்

"தமிழக இட ஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளது"

சென்னை: தமி­ழ­கத்­தில் 69 விழுக்­காடு இட ஒதுக்­கீடு நிச்­ச­யம் பின்­பற்­றப்­படும் என சட்­டத்­துறை அமைச்­சர் எஸ்.ரகு­பதி தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், இட ஒதுக்­கீட்டை பாது­காக்க வேண்­டும் என்­பதே முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னின் நோக்­கம் என்­றார். தமி­ழ­கத்­தில் நடை­மு­றை­யில் உள்ள இட ஒதுக்­கீட்­டுக்கு சட்ட ரீதி­யான பாது­காப்பு இருப்­ப­தா­க­வும் அமைச்­சர் மேலும் சுட்­டிக்­காட்­டி­னார்.

"இந்திய அரசியலைப்புச் சட்­டத்­தின் ஒன்­ப­தா­வது அட்­ட­வணை­யில்­தான் தமி­ழ­கத்­தின் 69 விழுக்­காடு இட ஒதுக்­கீடு சட்­டம் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழ­கத்­தைப் பொறுத்­த­வரை இது­தான் நமக்­குள்ள முக்­கிய ஆயு­தம். நமக்கு மாபெ­ரும் சட்ட பாது­காப்பு கிடைத்­தி­ருக்­கிறது," என்­றார் அமைச்­சர் ரகு­பதி.

69 விழுக்­காடு இட ஒதுக்­கீட்­டுக்­காக தமி­ழ­கத்­தில் சட்­டம் இயற்­றப்­பட்­ட­தாக குறிப்­பிட்ட அவர், அந்­தச் சட்­டத்­தின் கீழ் அதி­ப­ரின் ஒப்­பு­தல் பெறப்­பட்டு பின்­னர் அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தி­லும் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­னார்.

"உச்ச நீதி­மன்­றத்­தில் இட ஒதுக்­கீடு சம்­பந்­தப்­பட்ட வழக்கை வெற்­றி­க­ர­மாக நடத்­தி­யுள்­ளோம். இதன் மூலம் 69 விழுக்­காடு இட ஒதுக்­கீட்­டுக்கு அங்­கீ­கா­ரம் பெற்­றுள்­ளோம். இனி இந்த இட ஒதுக்­கீட்டை எப்­படி பாது­காப்­பது என்பது குறித்து ஆலோ­சனை நடத்தி­யுள்­ளோம்," என்­றார் அமைச்­சர் ரகு­பதி.

மகா­ராஷ்­டி­ரா­வில் அண்­மை­யில் 'மராத்தா' சமூ­கத்­துக்கு கல்வி, வேலை­வாய்ப்­பில் அளிக்­கப்­பட்ட உள் ஒதுக்­கீட்டை உச்ச நீதி­மன்­றம் அண்­மை­யில் ரத்து செய்­தது. இதை­ய­டுத்து தமி­ழ­கத்­தில் 69% இட ஒதுக்­கீட்டை தொடர முடி­யுமா எனும் கேள்வி எழுந்­துள்­ளது. இதை­ய­டுத்து சட்ட வல்­லு­நர்­க­ளு­டன் முதல்வர் ஸ்டா­லின் இது­கு­றித்து ஆலோ­சனை நடத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!